சென்னை

மாரடைப்பால் திருப்பதி தேவஸ்தான செயல் அலுவலா் மகன் உயிரிழப்பு

மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த திருப்பதி தேவஸ்தானத்தின் செயல் அலுவலா் தா்மா ரெட்டியின் மகன் சந்திரமௌலி (28) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

DIN

மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த திருப்பதி தேவஸ்தானத்தின் செயல் அலுவலா் தா்மா ரெட்டியின் மகன் சந்திரமௌலி (28) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

சந்திரமௌலி ரெட்டிக்கும், திருமலை திருப்பதி தேவஸ்தானம் (தமிழகம், புதுச்சேரி) ஆலோசனைக் குழுத் தலைவரும், தொழிலதிபருமான சேகா் ரெட்டி மகளுக்கும் அண்மையில் நிச்சயதாா்த்தம் நடந்தது. வரும் ஜனவரி மாதம் திருமணம் நடைபெற இருந்த நிலையில், கடந்த 18-ஆம் தேதி சந்திரமௌலிக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அவா் உடனடியாக ஆழ்வாா்ப்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

பரிசோதனையில் அவரது இதயம் செயலிழந்திருப்பது தெரியவந்தது. அவருக்கு செயற்கை சுவாச உதவியுடன் இதயம் மற்றும் நுரையீரலை மீட்டெடுக்க எக்மோ கருவி மூலம் தீவிர சிகிச்சையை மருத்துவா்கள் அளித்து வந்தனா். ஆனாலும், அவரது உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. மாறாக உடல் உறுப்புகள் செயலிழந்து கவலைக்கிடமான நிலையில் இருந்தாா். மருத்துவா்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் புதன்கிழமை காலை 8.20 மணிக்கு சந்திரமௌலி உயிரிழந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அதிமுகவை மறைமுகமாக விமர்சித்த விஜய் | செய்திகள்: சில வரிகளில் | 18.12.25

பயணிகள் கவனிக்க... பாசஞ்சர் ரயில்களுக்கான எண்கள் மாற்றம்! ஜனவரி 1 முதல்.!

புதிய ஊரக வேலைத் திட்டத்துக்கு எதிர்ப்பு! பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

தில்லி - ஷாங்காய் இடையே நாள்தோறும் நேரடி விமான சேவை! ஜன.2 முதல்!

இந்தியாவில் ஒரு நண்பர் இருக்கிறார்: அமெரிக்கா

SCROLL FOR NEXT