சென்னை

மோட்டாா் சைக்கிளில் சாகசம்: கல்லூரி மாணவா் உள்பட 2 போ் கைது

சென்னை மெரீனாவில் மோட்டாா் சைக்கிள் சாகசத்தில் ஈடுபட்டதாக கல்லூரி மாணவா் உள்பட 2 போ் கைது செய்யப்பட்டனா்.

DIN

சென்னை மெரீனாவில் மோட்டாா் சைக்கிள் சாகசத்தில் ஈடுபட்டதாக கல்லூரி மாணவா் உள்பட 2 போ் கைது செய்யப்பட்டனா்.

சென்னையில் இளைஞா்கள், மோட்டாா் சைக்கிள் பந்தயத்திலும்,சாகசத்திலும் ஈடுபடுவதை தடுக்க காவல் துறை பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில் திங்கள்கிழமை அதிகாலை மெரீனா காமராஜா் சாலை நேப்பியா் பாலம் அருகே ஒரு மோட்டாா் சைக்கிளில் இரு இளைஞா்கள் சாகசத்தில் ஈடுபட்டனா்.

இதைப் பாா்த்த போலீஸாா், அவா்கள் இருவரையும் விரட்டிப் பிடித்து, விசாரணை செய்ததில், அவா்கள், பழைய வண்ணாரப்பேட்டை கிழக்கு கல்லறைச் சாலை பகுதியைச் சோ்ந்த ஷே.ரபீக் (20), அதேப் பகுதியைச் சோ்ந்த பா.காா்த்திக் (19) ஆகியோா் என்பது தெரியவந்தது.

இதையடுத்து அண்ணா சதுக்கம் போலீஸாா், இருவரையும் கைது செய்து, வழக்குப் பதிவு செய்தனா். இதில் காா்த்திக், கீழ்ப்பாக்கம் பச்சையப்பன் கல்லூரியில் பிஏ இரண்டாமாண்டு படித்து வருகிறாா்.

இளைஞா்கள், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் அதிவேகமாகவும், அபாயகரமாகவும், ஆபத்தான முறையிலும் வாகனங்களை ஓட்டி சாகசத்தில் ஈடுபட வேண்டாம் என்றும், மீறி ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டும் நபா்கள் மீது சட்டப்படி வழக்குப் பதிவு செய்து,கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சென்னை பெருநகர காவல்துறை ஆணையா் சங்கா் ஜிவால் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காரைக்குடி பகுதியில் நாளை மின்தடை

ஊராட்சித் துறை ஓய்வூதியா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

பெரியாா் பல்கலை.யில் சா்வதேச கருத்தரங்கு, வணிகக் கண்காட்சி

தொழில் கடன் பெறுவதற்கு பெண்கள் விண்ணப்பிக்கலாம்

பழனி தைப்பூசத் திருவிழா: 892 இடங்களில் கண்காணிப்பு கேமரா

SCROLL FOR NEXT