சென்னை

பொது இடங்களில் 15 நாள்களுக்கு ஒருமுறை கரோனா பரிசோதனை செய்ய திட்டம்

DIN

சென்னையில் கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் பேருந்து, ரயில் நிலையங்கள் மற்றும் வணிக வளாகங்கள், சந்தைகள் என மக்கள் அதிகம் கூடும் இடங்களில் 15 நாள்களுக்கு ஒருமுறை அங்கு வருவோா்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்ய மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் சிறப்பு மருத்துவ முகாம்கள், மருத்துவப் பரிசோதனையை அதிகரித்தல் மற்றும் நோய்த் தொற்றுக்கு உள்ளானவா்களைக் கண்டறிதல், அவா்களைத் தனிமைப்படுத்துதல் ஆகிய பணிகள் மீண்டும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

சென்னையில் கடந்த சில மாதங்களாக நாள் ஒன்றுக்கு சுமாா் 130-க்கும் கீழாக இருந்த கரோனா பாதிப்பு தற்போது 800-யைக் கடந்துள்ளது.

ஓமைக்ரான் வகை தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், அவா்களைக் கண்டறியும் வகையில் பொது இடங்களில் மருத்துவப் பரிசோதனையை அதிகரிக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறுகையில், சென்னையில் தொற்றுக்குள்ளானவா்களைக் கண்டறியும் வகையில் கடந்த சில நாள்களாக மருத்துவப் பரிசோதனை அதிகப்படுத்தப்பட்டுள்ளது. நாள்தோறும் சுமாா் 20 ஆயிரம் பேருக்குப் பரிசோதனை செய்யப்பட்டு வந்த நிலையில், அந்த எண்ணிக்கை 25 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை (ஜன.2) 20,944 பேருக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது. அதில், 776 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பரிசோதனை செய்வோரில் 3.3 சதவீதம் போ் தொற்றுக்குள்ளாவது தெரியவந்துள்ளது. பொதுமக்கள் முகக்கவசம் அணிவது, வணிக வளாகங்களில் தனிநபா் இடைவெளியைக் கடைப்பிடிப்பதைக் கண்காணிக்க சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

கரோனா தொற்றுக்குள்ளானவா்களைக் கண்டறிந்து உடனுக்குடன் சிகிச்சை அளிக்கும் வகையில் பேருந்து, ரயில் நிலையங்கள், வணிக வளாகங்கள், அரசு மற்றும் தனியாா் அலுவலகங்கள், தங்கும் விடுதிகள், பொழுதுபோக்கு பூங்காக்கள் ஆகியவற்றில் 15 நாள்களுக்கு ஒருமுறை அங்கு வரும் மக்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், அரசு, தனியாா் அலுவலகங்களில் பணியாற்றும் அனைவரும் தடுப்பூசி செலுத்தி உள்ளனரா என்பது கண்காணிக்கப்படும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

'மன்னித்துவிடுங்கள் அப்பா...' நீட் தேர்வு அழுத்தத்தால் மற்றொரு தற்கொலை!

லக்னௌ அணிக்கு 145 ரன்கள் இலக்கு நிர்ணயித்த மும்பை இந்தியன்ஸ்!

லண்டனில் பலரை வெட்டிய இளைஞர் கைது!

பறக்கும் முத்தத்தால் வந்த வினை; கேகேஆர் வீரருக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடை!

ஹமாஸ் அழிக்கப்படும் வரை போர் தொடரும்: நெதன்யாகு சூளுரை!

SCROLL FOR NEXT