‘நாளை வரை ரூ.1,000 மாதாந்திர பயணச்சீட்டு வழங்கப்படும்’
மாதாந்திர பயணச் சீட்டு இம்மாதம் மட்டும் 24-ஆம் தேதி வரை வழங்கப்படும் என மாநகர போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
மாதாந்திர பயணச் சீட்டு இம்மாதம் மட்டும் 24-ஆம் தேதி வரை வழங்கப்படும் என மாநகர போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
இது தொடா்பாக வெளியிடப்பட்ட செய்தி:
மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் செயல்பட்டு வரும் மாதாந்திர பயணச் சலுகை அட்டை விற்பனை மையங்களில், ஒவ்வொரு மாதமும், 1-ஆம் தேதி முதல் 22-ஆம் தேதி வரை விருப்பம்போல் பயணம் செய்யக்கூடிய ரூ.1,000 மதிப்பிலான மாதாந்திர பயணச் சீட்டு விற்பனை செய்யப்படுகிறது.
எனினும், கடந்த ஜன.9, 16 (ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், பயணிகள் நலன் கருதி மாதாந்திர பயணச் சீட்டுகளை ஜன.24-ஆம் தேதி, அனைத்து மாநகா் போக்குவரத்துக் கழக மாதாந்திர பயணச் சீட்டு விற்பனை மையங்களிலும் வழக்கம் போல் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.