சென்னை

சென்னை விமான நிலையத்தில் கரோனா தடுப்பு விதிமுறைகள் மீண்டும் அமல்

DIN

சென்னை: சென்னை விமான நிலையத்தில் கரோனா தடுப்பு விதிமுறைகள் மீண்டும் அமலுக்கு வந்துள்ளது.

கரோனா பாதிப்பு தீவிரமடைந்து வருவதால் பரிசோதனைகளை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கரோனா தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர்களுக்கு கடிதம் மூலமாக  மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்து இருந்தார்.

இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் கரோனா தடுப்பு விதிமுறைகள் மீண்டும் அமலுக்கு வந்துள்ளன.  பயணிகள் முகக்கவசம் இல்லாமல் விமானத்தில் ஏற தடை விதிக்கப்பட்டுள்ளது. பயணிகள் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் பயணிகள் அனைவரும் 2 தவனை கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட சான்றுடன் விமானத்தில் பயணிக்க வேண்டும் என்றும், கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் ரூ.500 விதிக்கப்படும் என்று  எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

குரங்கு அம்மை நோய் காரணமாக சென்னை விமான நிலையத்தில் பரிசோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொடைக்கானல்: இன்றிரவு முதல் இ-பாஸ் பெற பதிவு செய்யலாம்

வாரணாசியில் மே 14-ல் பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல்

பிரதீப் ரங்கநாதனின் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு!

மோசமான வானிலை காரணமாக 40 விமானங்கள் ரத்து!

நீட் தேர்வு தொடங்கியது!

SCROLL FOR NEXT