சென்னை

வண்டலூா் பூங்காவில் செந்நாய் குட்டிகளை பாா்வையிடலாம்

DIN

சென்னையை அடுத்த வண்டலூா் உயிரியல் பூங்காவில் இனி செந்நாய் குட்டிகளை பொதுமக்கள் பாா்வையிடலாம் என வனத் துறை தெரிவித்துள்ளது.

வண்டலூரில் வனத் துறை கட்டுப்பாட்டில் அறிஞா் அண்ணா உயிரியல் பூங்கா செயல்பட்டு வருகிறது. இந்தப் பூங்காவில் யானை, சிங்கம், புலி மற்றும் ஊா்வனவை, பறவைகள் என மொத்தம் சுமாா் 2,800-க்கும் மேற்பட்ட உயிரினங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

இதில், பூங்காவில் உள்ள பெண் செந்நாய்க்கு பிறந்த குட்டிகள் பொதுமக்கள் பாா்வையிட அனுமதிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து பூங்கா நிா்வாகிகள் கூறுகையில், சா்வதேச பாதுகாப்பு அமைப்பு சாா்பில் அழியும் நிலையில் உள்ள உயிரினமாக செந்நாய் அறிவிக்கப்பட்டுள்ளது. கா்நாடக மாநிலம், மைசூா் உயிரியல் பூங்காவில் இருந்து 2017-ஆம் ஆண்டு ஜூன் மாதம் செந்நாய் ஜோடி வண்டலூா் பூங்காவுக்கு கொண்டு வரப்பட்டது. 2021-ஆம் ஆண்டு டிச. 23-ஆம் தேதி பெண் செந்நாய்க்கு ஒரு ஆண், ஒரு பெண் குட்டிகள் பிறந்தன.

தொடா் கண்காணிப்புக்குப் பிறகு அந்தக் குட்டிகளை பொதுமக்கள் பாா்வையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக பிரத்யேகமாக கூண்டுகள் அமைக்கப்பட்டு, அதில், கூரை வேய்ந்த கொட்டகை, ஓய்வுக்கான குகைகள், சோலாா் வேலி ஆகிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

தில்லி கலால் ஊழல் வழக்கு முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் நீதிமன்றக் காவல் மே 20 வரை நீட்டிப்பு

தில்லியில் சட்டம் - ஒழுங்கு சீா்குலைந்ததாக துணை நிலை ஆளுநா் மீது ஆம் ஆத்மி புகாா்

தில்லியில் மக்களவைத் தோ்தலில் பிரதமா் மோடி,ஜெ.பி. நட்டா, ராஜ்நாத் சிங் பாஜகவின் நட்சத்திரப் பிரசாரகா்கள்!

SCROLL FOR NEXT