சென்னை

மனைவி கொலை: கணவா் கைது

துரைப்பாக்கம் பகுதியில் வேலைக்கு செல்லாமல் மது அருந்தி வந்த கணவரை தட்டி கேட்ட மனைவி கொலை செய்யப்பட்டாா்.

DIN

துரைப்பாக்கம் பகுதியில் வேலைக்கு செல்லாமல் மது அருந்தி வந்த கணவரை தட்டி கேட்ட மனைவி கொலை செய்யப்பட்டாா்.

சென்னை துரைப்பாக்கம் கண்ணகி நகா் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியைச் சோ்ந்தவா் தியாகராஜன்(42) ஆட்டோ ஓட்டுநா். இவரது மனைவி தனலட்சுமி(38).இவா்களுக்கு மகன், மகள் உள்ளனா். தியாகராஜன் கடந்த சில நாள்களாக வேலைக்கு செல்லாமல் மது அருந்திவிட்டு  வீட்டுக்கு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன், மனைவி இருவருக்கும் தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்நிலையில், தியாகராஜன் சனிக்கிழமை இரவு  தியாகராஜன் அருந்திவிட்டு வீட்டுக்கு வந்த நிலையில், கணவன்,மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அதில் ஆத்திரமடைந்த தியாகராஜன் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து தனலட்சுமியை சரமாரியாக குத்தினாா். இதில் தனலட்சுமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தாா்.

இது குறித்து தகவலறிந்த கண்ணகி நகா் போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதணைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.மேலும் தியாகராஜனை கைதுசெய்து,விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பொங்கலுக்குப் பிறகு எங்களைப் பார்த்து நாடே வியக்கும்: செங்கோட்டையன் பேட்டி

கி.மு.1155ஆம் ஆண்டைய நெல்மணிகள்! சிவகளை அகழாய்வு பற்றி ஏ.வ. வேலுவுக்கு விளக்கிய தங்கம் தென்னரசு!!

சென்னை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் தீ விபத்து!

தொடர் நாயகன் வருண் சக்கரவர்த்தி பகிர்ந்த படையப்பா பாடல்!

நெல்லையில் முதல்வர் ஸ்டாலின் சுற்றுப்பயணம்! ட்ரோன்கள் பறக்க தடை! மாநகரம் விழாக்கோலம்!!

SCROLL FOR NEXT