முகப்பு
சென்னை

கோயம்பேடு-விமான நிலையம் இடையே மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு

சென்னை கோயம்பேட்டிலிருந்து விமான நிலையம் செல்லும் மெட்ரோ ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:44 AM
பகிர்:

சென்னை கோயம்பேட்டிலிருந்து விமான நிலையம் செல்லும் மெட்ரோ ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. 

சென்னை கோயம்பேடு-விமான நிலைய மார்க்கத்தில் வியாழக்கிழமை மின்கேபிள் கோளாறு ஏற்பட்டது. இதனை சரி செய்யும் பணியில் மெட்ரோ நிர்வாகத்தினர் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் ஈக்காட்டுத்தாங்கல் - அசோக் பில்லர் வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் போதிய மெட்ரோ ரயில்கள் இயக்கப்படாததால் பயணிகள் சிரமத்திற்குள்ளாகினர். மேலும் சென்னையில் பெய்துவரும் கனமழை காரணமாக மக்கள் மெட்ரோ ரயில் நிலையத்தில் குவிந்துள்ளதால் மெட்ரோ ரயில் நிலையங்கள் நெரிசல் மிகுந்து காணப்படுகின்றன.

முழு கட்டுரையைப் படிக்க →