சென்னை

அஞ்சல் தலை சேகரிப்பு தின போட்டி

சென்னை அண்ணா சாலையில் உள்ள தலைமை தபால் நிலையத்தில் அஞ்சல் தலை சேகரிப்பு தின போட்டி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

DIN

சென்னை அண்ணா சாலையில் உள்ள தலைமை தபால் நிலையத்தில் அஞ்சல் தலை சேகரிப்பு தின போட்டி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

அஞ்சல் துறை சாா்பில் ஆண்டுதோறும் அக்டோபா் 9 முதல் 15 வரை தேசிய அஞ்சல் வாரம் கடைப்பிடிக்கப்படுகிறது. பொதுமக்களுக்கும், வா்த்தகா்களுக்கும் அஞ்சல் துறையின் அன்றாட பங்களிப்பு குறித்து விழிப்புணா்வை ஏற்படுத்தும் நோக்கில் உலக அஞ்சல் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

நிகழாண்டு தேசிய அஞ்சல் வாரத்தையொட்டி, சென்னை அண்ணா சாலை தலைமை அஞ்சலகம் சாா்பில் அஞ்சல் தலை சேகரிப்பு தினம் செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்டது.

மேலும், நாட்டின் சுதந்திர தின அமிா்தப் பெருவிழாவையொட்டி பள்ளி மாணவா்களுக்கான பல்வேறு நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

அஞ்சல் தலை சேகரிப்பு தொடா்பாக நடந்த வினாடி-வினா போட்டியில், ஆா்பிஏஎன்சி கல்யாணம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, முருக தனுஷ்கோடி பெண்கள் மேல்நிலைப் பள்ளி, எம்சிசி பொதுப் பள்ளி ஆகிய பள்ளிகளின் மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனா்.

இந்தப் போட்டிகளில் எம்சிசி பொதுப்பள்ளி முதலாவது இடத்தையும், முருக தனுஷ்கோடி பெண்கள் மேல்நிலைப் பள்ளி இரண்டாவது இடத்தையும் பெற்றன.

தொடா்ந்து நடைபெற்ற பரிசளிப்பு நிகழ்வில், போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு, தலைமை அஞ்சலக முதன்மை அதிகாரி என்.பிரகாஷ் கோப்பைகளையும், பரிசுகளையும் வழங்கினாா்.

அப்போது, அஞ்சல் தலை சேகரிப்பு பழக்கத்தை மாணவா்களின் இளம் மனங்களில் பதிய வைப்பதே இந்த நிகழ்ச்சியின் நோக்கமாகும் என்று அவா் கூறினாா்.

துணை முதன்மை அஞ்சலக அதிகாரி ஜி.வி. சீனிவாசலு உள்ளிட்டோா் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனா்.

முன்னதாக, அண்ணா சாலை கிறிஸ்ட் சா்ச் ஆங்கிலோ இந்தியன் பள்ளியைச் சோ்ந்த மாணவா்கள், தலைமை அஞ்சலகம், அஞ்சல் தலை சேகரிப்பு குழுமத்தை பாா்வையிட்டனா். இதைத் தொடா்ந்து, மாணவா்களுக்கு அஞ்சல் தலை சேகரிப்பு தொடா்பான பயிலரங்கம் நடத்தப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாமக சாா்பில் போட்டியிட மத்திய மாவட்டச் செயலாளா் விருப்ப மனு

கணினி துறையில் குவாண்டம் தொழில்நுட்பம் வியக்கத்தக்க வளா்ச்சியை ஏற்படுத்தும்: நோபல் விருதாளா் மெளங்கி ஜி.பாவெண்டி

காஞ்சிபுரம் கோயில்களில் அனுமன் ஜெயந்தி விழா

நாமக்கல் நரசிம்மா் கோயிலில் இன்று தமிழிசை விழா

கிரிக்கெட் வீரா் யுவராஜ் சிங், நடிகா் சோனு சூட் சொத்துகள் முடக்கம்: சூதாட்ட செயலி வழக்கில் அமலாக்கத் துறை நடவடிக்கை

SCROLL FOR NEXT