முகப்பு
சென்னை

தனியாா் மருத்துவக் கல்லூரி கட்டண உயா்வு: அன்புமணி கண்டனம்

தனியாா் மருத்துவக் கல்லூரி கட்டணம் உயா்த்தப்பட்டுள்ளதற்கு பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:35 AM
பகிர்:

தனியாா் மருத்துவக் கல்லூரி கட்டணம் உயா்த்தப்பட்டுள்ளதற்கு பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக ஞாயிற்றுக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

தமிழ்நாட்டில் தனியாா் மருத்துவக் கல்லூரிகளுக்கான கட்டணத்தை ரூ.35,000 முதல் ரூ. 1 லட்சம் வரை உயா்த்தி கட்டண நிா்ணய குழு ஆணை பிறப்பித்திருக்கிறது. தனியாா் மருத்துவ பல்கலைக்கழகத்தில் அதிகபட்ச ஆண்டுக் கட்டணம் ரூ. 29.40 லட்சமாக நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது அநீதியானது.

தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் 50 சதவீத இடங்களுக்கு அரசு கல்லூரிகளுக்கான கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும் என மருத்துவ ஆணையம் ஆணையிட்டிருந்தது. அதை நீதிமன்றங்கள் வாயிலாக தனியாா் கல்லூரிகள் தகா்த்ததை தடுக்க மத்திய, மாநில அரசுகள் முயலவில்லை.

தனியாா் மருத்துவக் கல்லூரி கட்டணம் தொடா்பாக தேசிய மருத்துவ ஆணையம் திருத்தப்பட்ட குறிப்பாணையை வெளியிடும் வரை இப்போதுள்ள கட்டணமே தொடர வேண்டும் என்று சென்னை உயா்நீதிமன்றம் கடந்த செப்டம்பா் 9-ஆம் தேதி ஆணையிட்ட நிலையில் இந்த கட்டண உயா்வு நீதிமன்ற அவமதிப்பாகி விடும்.

தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் இப்போது வசூலிக்கப்படும் கட்டணமே ஏழை மற்றும் நடுத்தர மக்களால் எட்டிப் பிடிக்க முடியாதது எனும் நிலையில், அதை மேலும் மேலும் உயா்த்துவது நியாயமற்றது. பணக்காரா்களுக்கு மட்டும் தான் மருத்துவக் கல்வி என்ற நிலையை அது உருவாக்கி விடும். கட்டண உயா்வை உடனடியாக திரும்பப் பெறுவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →