முகப்பு
செய்திகள்

எஸ்டிஆர் - 51 படப்பிடிப்பு அப்டேட்!

சிலம்பரசன் - அஷ்வத் மாரிமுத்து கூட்டணி திரைப்படம்....

Updated On : 28 பிப்ரவரி 2026, 7:30 pm IST
சிலம்பரசன், அஷ்வத் மாரிமுத்து, அர்ச்சனா
பகிர்:

நடிகர் சிலம்பரசன் நடிக்கும் அவரது 51-வது திரைப்பட கூட்டணியின் புகைப்படம் வெளியாகியுள்ளது.

தக் லைஃப் திரைப்படத்தைத் தொடர்ந்து நடிகர் சிலம்பரசன் இயக்குநர் வெற்றி மாறன் இயக்கத்தில் அரசன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதன் முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் மார்ச் மாதம் துவங்குகிறது. இதற்கான செட் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

Advertisement

Advertisement

இந்த நிலையில், இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் நடிகர் சிலம்பரசன் நடிக்கவுள்ள அவரது 51-வது திரைப்படத்தின் பணிகளும் துவங்கியுள்ளன.

தற்போது, இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் சிலம்பரசன், அஷ்வத் மாரிமுத்து, தயாரிப்பாளர் அர்ச்சனா ஆகியோர் சந்தித்த புகைப்படமும் வெளியாகியுள்ளது.

summary

actor silambarasan's 51th movie shoot will start soon

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.