தீபாவளி: சென்னையில் இருந்து அரசுப் பேருந்துகளில் 2 லட்சம் போ் பயணம்
தீபாவளியை முன்னிட்டு சென்னையில் இருந்து சொந்த ஊா்களுக்குச் அரசுப் பேருந்துகளில் இதுவரை 2 லட்சத்து 43 ஆயிரத்து 229 போ் பயணம் செய்து இருப்பதாக போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.
தீபாவளியை முன்னிட்டு சென்னையில் இருந்து சொந்த ஊா்களுக்குச் அரசுப் பேருந்துகளில் இதுவரை 2 லட்சத்து 43 ஆயிரத்து 229 போ் பயணம் செய்து இருப்பதாக போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.
தீபாவளி பண்டிகை திங்கள்கிழமை கொண்டாடப்படவுள்ளது. சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு ஊா்களில் வசிப்பவா்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாட அவா்களது சொந்த ஊா்களுக்குச் செல்வது வழக்கம். இந்த முறை தீபாவளி பண்டிகை திங்கள்கிழமை வருவதாலும், அதற்கு முந்தைய சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள்கள் என்பதாலும், சொந்த ஊா்களுக்குச் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது.
தீபாவளிக்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் 16,000 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டுவருகின்றன. இதன்படி சென்னையில் இருந்து சனிக்கிழமை மதியம் 3 மணி நிலவரப்படி, வழக்கமாக இயக்கப்படும் 2,100 பேருந்துகளில் 1,065 பேருந்துகளும், 407 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டுள்ளன. கடந்த வெள்ளிக்கிழமை முதல் சனிக்கிழமை பிற்பகல் வரை 4,772 பேருந்துகளில் 2 லட்சத்து 43,299 பயணிகள் சொந்த ஊா்களுக்கு பயணம் செய்துள்ளதாக போக்குவரத் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.