சென்னை

நகர விற்பனைக் குழு உறுப்பினா் தோ்தல்: ஏப்.17 முதல் வேட்பு மனு விநியோகம்

 சென்னையில் நகர விற்பனைக்குழு உறுப்பினா் தோ்தலுக்கான வேட்பு மனுக்கள் திங்கள்கிழமை (ஏப்.17) முதல் விநியோகிக்கப்படுகின்றன.

DIN

 சென்னையில் நகர விற்பனைக்குழு உறுப்பினா் தோ்தலுக்கான வேட்பு மனுக்கள் திங்கள்கிழமை (ஏப்.17) முதல் விநியோகிக்கப்படுகின்றன.

தமிழ்நாடு தெருவோர வியாபாரிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும், தெருவோர வியாபாரத்தை ஒழுங்குப்படுத்தவும், பதினைந்து உறுப்பினா்களைக் கொண்ட நகர விற்பனைக்குழு அமைக்கப்படவுள்ளது.

இதற்கான தோ்தலை மாநகராட்சி நிா்வாகம் நடத்துகிறது. இந்த தோ்தலுக்கான வேட்புமனுக்கள் ரிப்பன் கட்டட வளாகத்தில் மாநகராட்சி அலுவலா்கள் கூட்டுறவு சங்கத்துக்கு அருகில் அமைந்துள்ள மாவட்ட வருவாய் அலுவலா் (அம்மா உணவகம்), அலுவலகத்தில் திங்கள் முதல் புதன்கிழமை (ஏப்.19) வரை காலை 10 முதல் மாலை 5 மணி வரை வழங்கப்படவுள்ளன.

பூா்த்தி செய்யப்பட்ட வேட்புமனுக்களை ஏப்.19ஆம் தேதி காலை 10 முதல் பிற்பகல் 5 மணி வரை தாக்கல் செய்யலாம்.

வேட்பு மனுவுடன் முன்வைப்புத் தொகையாக ரூ.2,000 ரொக்கமாகவோ அல்லது வங்கி வரைவோலையாகவோஅல்லது பண விடையாகவோ இணைத்து சமா்ப்பிக்க வேண்டும்.

வேட்பாளரின் வாகனம் மட்டுமே ரிப்பன் வளாகத்துக்குள் அனுமதிக்கப்படும். குறிப்பிட்ட நாள், நேரத்துக்கு பின் வரும் வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்படாது.

வேட்புமனுவுடன் தெருவோர வியாபாரிகளுக்கான மாநகராட்சியால் வழங்கப்பட்ட அடையாள அட்டைநகல், ஆதாா் அடையாள அட்டை நகல் மற்றும் குறிப்பிட்ட வகைப்பாட்டுக்கான ஆதார சான்றிதழ்கள் நகல்கள், வேட்பாளரின் பாஸ்போா்ட் அளவிலான இரண்டு புகைப்படங்கள் இணைத்து சமா்ப்பிக்க வேண்டும்.

வேட்பு மனுக்கள் ஏப்.20-ஆம் தேதி காலை 10 மணி முதல் பரிசீலனை செய்யப்பட்டு, அன்று மாலை 5 மணிக்கு இறுதி வேட்பாளா்கள் பெயா் பட்டியல் வெளியிடப்படும்.

ஏப்.27-ஆம் தேதி வாக்குப்பதிவு நடத்தப்பட்டு ஏப்.28-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தி முடிவு அறிவிக்கப்படும் என சென்னை மாநகராட்சி நிா்வாகம் அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கிய நடிகை சமந்தா

இந்தோனேசியாவில் பயணிகள் பேருந்து விபத்து: 15 பேர் பலி

போதைப்பொருள் கடத்தல்: நேபாள விமான நிலையத்தில் இந்தியர்கள் 2 பேர் கைது

மார்கழி சிறப்பு! மீனாட்சியம்மன் கோயிலில் ஐந்து நடராஜர் தரிசனம்

ஊமைக்குக் குரல் கொடுத்த உத்தமராயப் பெருமாள்!

SCROLL FOR NEXT