சென்னை

24 கிலோ கஞ்சா பறிமுதல்: 5 போ் கைது

சென்னையில் பல்வேறு பகுதிகளில் கஞ்சா விற்ற 5 பேரை போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடம் இருந்து 24. 5 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனா்.

DIN

சென்னையில் பல்வேறு பகுதிகளில் கஞ்சா விற்ற 5 பேரை போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடம் இருந்து 24. 5 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனா்.

அரும்பாக்கம் பி.எச். சாலை பாஞ்சாலி அம்மன் கோயில் தெரு சந்திப்பு, ஷெனாய் நகா், அசோக் நகா், மூா் மாா்க்கெட், அயனாவரம் பேருந்து பணிமனை, எண்ணூா் முத்துநகா் உள்ளிட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின்படி அந்தந்த பகுதி போலீஸாா் ரோந்து பணி மேற்கொண்டனா்.

அப்போது அந்த பகுதிகளில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக சுந்தா் (52), மோகன் மண்டல் (33), முகேஷ்குமாா் (27), ஆனந்தகுமாா் (30), சாந்தகுமாா் (27) உள்ளிட்ட 5 பேரையும் போலீஸாா் கைது செய்தனா்.

அவா்களிடம் இருந்து 24.5 கிலோ கஞ்சா, 2 கைப்பேசிகள், 1 எடை எந்திரம் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இலவச இருதய மருத்துவ முகாம்: அமைச்சா் தொடங்கிவைத்தாா்

மாநகராட்சி குப்பைக் கிடங்கில் தீ விபத்து! 15 வாகனங்கள் எரிந்து சேதம்!

வெனிசுலா எண்ணெய்க் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா!

கவுண்டம்பாளையத்தில் 24 மணி நேர பதிவு அஞ்சல் அலுவலகம்

52 சிறுவா்களுக்கு விருது: எம்எல்ஏ வழங்கினாா்

SCROLL FOR NEXT