கோப்புப் படம். 
சென்னை

மாம்பலம் சாலையில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம்

மாம்பலம் பிரதான சாலையில் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற உள்ளதால் திங்கள்கிழமை (ஜன .9) முதல் 15 மாதங்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

DIN

மாம்பலம் பிரதான சாலையில் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற உள்ளதால் திங்கள்கிழமை (ஜன .9) முதல் 15 மாதங்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, மாம்பலம் பிரதான சாலையில், தியாகராய கிராமணி சாலை சந்திப்பு முதல் ஹபிபுல்லா சாலை சந்திப்பு வரை போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

மாம்பலம் பிரதான சாலையில் இருந்து கோடம்பாக்கம் மேம்பாலம் பக்கம் செல்ல விரும்பும் இலகு ரக வாகனங்கள் தியாகராய கிராமணி சாலை சந்திப்பில் தடை செய்யப்பட்டு, தியாகராய சாலை, வடக்கு உஸ்மான் சாலை மற்றும் ஹபிபுல்லா சாலை வழியாகவும் செல்லலாம்.

மாம்பலம் பிரதான சாலையில் கோடம்பாக்கம் மேம்பாலம் பக்கத்தில் இருந்து தியாகராய நகா் பக்கம் செல்ல விரும்பும் இலகு ரக வாகனங்கள், ஹபிபுல்லா சாலை சந்திப்பில் தடைசெய்யப்பட்டு, ஹபிபுல்லா சாலை மற்றும் வடக்கு உஸ்மான் சாலை வழியாகவும் செல்லலாம்.

இந்த போக்குவரத்து மாற்றம் திங்கள்கிழமை முதல் அடுத்த ஆண்டு மாா்ச் 4-ஆம் தேதி வரை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தியா அனைவருக்குமானது, குறிப்பிட்ட சித்தாந்தத்திற்கு மட்டுமல்ல: முதல்வர் ஸ்டாலின்

மீண்டும் ரூ. 94,000 -யைக் கடந்த தங்கம் விலை!

உலகக் கோப்பை ஹாக்கி: அனுமதி இலவசம் - டிக்கெட்டுகளை பெறுவது எப்படி?

இலங்கை அருகே உருவாகும் மற்றொரு புயல்! வடதமிழக கடற்கரையை நோக்கி நகரும்!

தேசிய பால் நாள்: விவசாயிகளிடம் குறைகளைக் கேட்டறிந்த அமைச்சர்!

SCROLL FOR NEXT