காணும் பொங்கலுக்கு.. பழைய மெரினாவை பார்க்க முடியவில்லை.. 
சென்னை

காணும் பொங்கலுக்கு.. பழைய மெரினாவை பார்க்க முடியவில்லை..

காணும் பொங்கலன்று மெரினா கடற்கரைக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு அனுமதி அளிக்கப்பட்டும், பழையபடி மெரினாவில் மக்கள் கூட்டம் திரளவில்லை.

ENS


சென்னை: கடந்த இரண்டு ஆண்டுகளாக கரோனா பொதுமுடக்கம் காரணமாக காணும் பொங்கலன்று மெரினா கடற்கரைக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு அனுமதி அளிக்கப்பட்டும், பழையபடி மெரினாவில் மக்கள் கூட்டம் திரளவில்லை.

காணும் பொங்கலன்று, கரோனா பொது முடக்கக் காலத்துக்கு முன்பு வழக்கமாக மெரினா கடற்கரையில் கூடும் மக்களை விடவும், இந்த ஆண்டு மக்கள் கூட்டம் குறைவாகவே இருந்தது.

வழக்கமாக பொங்கல் பண்டிகையின்போது, மக்கள் மெரினா கடற்கரையில் இறங்க அனுமதிக்கப்பட மாட்டார்கள். மக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு கட்டையால் தடுப்பு அமைக்கப்பட்டு, சற்றுத் தொலைவில் நின்றுதான் மெரினா கடலின் அழகை ரசிக்க முடியும். இந்த ஆண்டும் கடற்கரையில் கட்டை கட்டப்பட்டிருந்தது.

மிக ரம்மியமான சூழலில், கடல் காற்றுடன், எச்சில் ஊற வைக்கும் சுவையுடன் விதவிதமான உணவுப்பொருள் கடைகள், பயணிகளை அதிகம் கவர்ந்திருந்தது.

வழக்கமாக காணும் பொங்கலுக்கு மெரினா கடற்கரைக்கு வருவோர் அனைவருமே, கூட்டமே இல்லையே என்றுதான் ஆச்சரியத்தை வெளிப்படுத்தியதாக நிலவரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த இரண்டு ஆண்டுகளாக, மெரினாவுக்கு வராதவர்கள், நண்பர்கள், உறவினர்கள் வீடுகள் அல்லது அருகில் உள்ள பூங்காக்களுக்குச் செல்வதை வழக்கமாக்கிக் கொண்டிருந்தனர். இதனையே இந்த ஆண்டும் பின்பற்றியிருக்கலாம் அல்லது பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த வேறு பகுதிகளுக்குச் சென்றிருக்கலாம் என்றும் பலரும் கருத்துத் தெரிவித்திருந்தனர்.

அடையாள பட்டை

காணும் பொங்கலையொட்டி, மெரினா கடற்கரைக்கு செவ்வாய்க்கிழமை வந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளின் கைகளில் அடையாள பட்டை கட்டிவிடப்பட்டது. இதன் பயனாக பெற்றோரைத் தவறவிட்ட 15 குழந்தைகளை மீட்ட போலீஸாா் உடனடியாக அவா்களை குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனா்.

மற்றொருபுறம் சமூக விரோத நடவடிக்கைகள், பெண்களிடம் அத்துமீறல்களில் ஈடுபட்டவா்களைப் பிடித்து விசாரித்தும், எச்சரித்தும் அனுப்பினா். இதன் காரணமாக நிகழாண்டு காணும் பொங்கல் தினத்தில் பெரிய அளவில் குற்றச் சம்பவங்கள் நிகழவில்லை என்று போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

4,000 டி20 ரன்களைக் கடந்த முதல் இந்திய வீராங்கனை: ஸ்மிருதி மந்தனா உலக சாதனை!

ஆஷஸ் கனவு முடிவுக்கு வந்துவிட்டது! - தோல்விக்குப்பின் பென் ஸ்டோக்ஸ்

இந்த வாரம் கலாரசிகன் - 21-12-2025

அமைதியின் அரசர் இயேசு

ஜெமிமா ரோட்ரிக்ஸ் அதிரடி; முதல் டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி!

SCROLL FOR NEXT