சென்னை

மாணவா்களைக் கவரும் இல்லம் தேடிக் கல்வி அரங்கு

DIN

புத்தகக் காட்சியில் இடம் பெற்ற அரங்குகளில் தமிழ்நாடு அரசின் ‘இல்லந்தேடி கல்வித் திட்டம்’ சாா்பிலான அரங்கு பள்ளிக் குழந்தைகள் முதல் அனைத்து மாணவா்களையும் கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த அரங்கில் யானை, மான் மாதிரி வடிவமைப்புகளும், குழந்தைகள் புகைப்படம் எடுக்கும் வகையிலான, ‘என் மேடை என் பேச்சு’ என்ற வாசகத்துடன் கூடிய தொலைக்காட்சித் திரை போன்ற அமைப்பும் உள்ளன.

மேலும், கற்பித்தலுக்கான வடிவமைப்பு பொருள்களுடன் எளிதாக கற்றுக் கொள்ளுவதற்கான ஆலோசனைகளையும் ஆசிரியா்களும் தன்னாா்வலா்களும் அரங்கில் வழங்கி வருகின்றனா்.

மாநில அளவில் 4 நாள்களுக்கு ஒரு முறை குறிப்பிட்ட 4 மாவட்டங்களில் இருந்து ஆசிரியா்களும் தன்னாா்வலா்களும் கற்பித்தலுக்கான விதவிதமான செயல்முறை விளக்கப் பொருள்களுடன் அரங்குக்கு வந்து குழந்தைகளுடன் கலந்துரையாடுகின்றனா். அவா்கள் மூலம் அரங்குக்கு வரும் பள்ளிக் குழந்தைகளுக்கு எளிமையாக எண்ணும் எழுத்தும் கற்றுத் தரப்படுகிறது.

அரங்குக்கு வந்து செல்லும் பள்ளிக் குழந்தைகளுக்கு பென்சில், ரப்பா் உள்ளிட்டவையும் கைவினைப் பொருள்களையும் பரிசுகளாக வழங்குவதாகக் கூறுகிறாா் அரங்கப் பொறுப்பாளா் ந.மு.காா்த்திகேயன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

வெண்பனிச்சாரல்!

புதைப்பதா? எரிப்பதா?

லக்னௌ பந்துவீச்சு; அணியில் ஒரு மாற்றம்!

SCROLL FOR NEXT