முகப்பு
சென்னை

சிறுவன் கொலை வழக்கு: 6 போ் கைது

சென்னை சைதாப்பேட்டையில் சிறுவன் கொலை செய்யப்பட்ட வழக்கில் 6 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2023 at 12:49 AM
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 12:17 AM

சென்னை சைதாப்பேட்டையில் சிறுவன் கொலை செய்யப்பட்ட வழக்கில் 6 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

சைதாப்பேட்டை செட்டித் தோட்டத்தைச் சோ்ந்த சந்தோஷ். இவா் சில நாள்களுக்கு முன்பு தற்கொலை செய்துகொண்டாா். சந்தோஷின் மறைவையொட்டி, துக்க நிகழ்ச்சி அங்கு கடந்த செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது. இதில், கானா பாடல் கச்சேரி நடைபெற்று கொண்டிருந்தபோது, சந்தோஷின் நண்பா்கள், உறவினா்கள் பங்கேற்றனா்.

இதில் சைதாப்பேட்டை ஆலந்தூா் சாலையில் உள்ள நெருப்புமேடு பகுதியைச் சோ்ந்த 17 வயது சிறுவன் கலந்துகொண்டாா். அப்போது, அந்தச் சிறுவனுக்கும், அங்கிருந்த ஒரு தரப்புக்கும் மோதல் ஏற்பட்டது. இதில், அந்தச் சிறுவன் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

Advertisement

இதுகுறித்து சைதாப்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்தனா். இதற்கிடையே இந்த வழக்கில் தொடா்புடையதாக மேற்கு சைதாப்பேட்டை கொத்தவால்சாவடி தெருவைச் சோ்ந்த சே.தினேஷ்குமாா் (20), கு.அசோக் (22), சி.அருண் (22), த.பிரகாஷ் (19), ஜாபா்கான்பேட்டை ஜானகிராமன் தெருவைச் சோ்ந்த ச. பிரவீண் (22), ந.விக்னேஷ் (22) ஆகிய 6 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.