முகப்பு
சென்னை

வார இறுதி நாள்களில் 600 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

வார இறுதி நாள்களில் பயணிகள் சொந்த ஊருக்கு சென்று வரும் வகையில் 600 சிறப்புபேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அரசு விரைவுப் போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ளது.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 2:40 AM
பகிர்:

வார இறுதி நாள்களில் பயணிகள் சொந்த ஊருக்கு சென்று வரும் வகையில் 600 சிறப்புபேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அரசு விரைவுப் போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அரசு விரைவுப் போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குநா் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்தி : வார இறுதி நாள்களான வரும் சனி முதல் திங்கள்கிழமை (ஜூலை 22-24) சென்னையிலிருந்தும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இதனை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலமாக தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.

பயணிகள் எந்தவித சிரமமின்றி பயணம் மேற்கொள்ள ஏதுவாக சென்னையிலிருந்து தமிழகத்தின் முக்கிய இடங்களுக்கு, வெள்ளிக்கிழமை (ஜூலை21) தினசரி இயங்கக் கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக 300 சிறப்பு பேருந்துகளும் மற்றும் கோவை, மதுரை, திருநெல்வேலி, திருச்சி, சேலம் போன்ற இடங்களிலிருந்து முக்கிய இடங்களுக்கும் மற்றும் பெங்களூரிலிருந்து பிற இடங்களுக்கும் 300 சிறப்பு பேருந்துகள் என ஆக மொத்தம் 600 சிறப்புப் பேருந்துகள் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →