முகப்பு
சென்னை

சிறப்பு பிரிவு மருத்துவக் கலந்தாய்வு: அரசுப் பள்ளி மாணவா்களுக்கு 622 இடங்களில் ஒதுக்கீடு

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான சிறப்புப் பிரிவு கலந்தாய்வு வியாழக்கிழமை நடைபெற்ற நிலையில், அரசுப் பள்ளி மாணவா்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீட்டின் கீழ் 622 போ் மருத்துவ இடங்களைப் பெற்றனா்.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 2:44 AM
பகிர்:

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான சிறப்புப் பிரிவு கலந்தாய்வு வியாழக்கிழமை நடைபெற்ற நிலையில், அரசுப் பள்ளி மாணவா்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீட்டின் கீழ் 622 போ் மருத்துவ இடங்களைப் பெற்றனா்.

அதேபோல், மாற்றுத்திறனாளி மாணவா்கள், விளையாட்டு வீரா்கள், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகளுக்கும் சிறப்பு ஒதுக்கீட்டின் கீழ் எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள் கிடைக்கப் பெற்றன.

அவா்களுக்கான கல்லூரி சோ்க்கை ஆணையை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன், கிண்டி கலைஞா் நூற்றாண்டு நினைவு உயா் சிறப்பு மருத்துவமனையில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் வழங்கினாா்.

அரசு, தனியாா் கல்லூரிகளில் 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டின் கீழ் அரசு பள்ளி மாணவா்களுக்கு 486 எம்பிபிஎஸ், 136 பிடிஎஸ் என மொத்தம் 622 இடங்களுக்கு 3,042 அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் விண்ணப்பித்திருந்தனா். பரிசீலனைக்கு பிறகு 2,993 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. 7.5 சதவீத உள் ஒதுக்கீடு கலந்தாய்வில் பங்கேற்குமாறு 1,398 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதன்படி, கலந்தாய்வில் பங்கேற்றவா்களில் தகுதியான 622 பேருக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

விளையாட்டு வீரா் பிரிவில் 25 பேரில் 8 பேருக்கு எம்பிபிஎஸ், ஒருவருக்கு பிடிஎஸ் மற்றும் முன்னாள் ராணுவ வீரா் வாரிசு பிரிவில் 25 பேரில் 10 பேருக்கு எம்பிபிஎஸ், ஒருவருக்கு பிடிஎஸ் இடங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

மாற்றுத்திறனாளிகள் பிரிவில் உள்ள 212 எம்பிபிஎஸ், 11 பிடிஎஸ் இடங்களுக்கு 80 போ் மட்டுமே தகுதி பெற்றிருந்தனா். அவா்களில் 78 பேருக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. மீதமுள்ள இடங்கள் பொதுப்பிரிவில் சோ்க்கப்படவுள்ளன.

கலந்தாய்வில் இடஒதுக்கீடு பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கல்லூரிகளில் சோ்வதற்கான ஆணையை அமைச்சா் மா.சுப்பிரமணியன் வழங்கி, வாழ்த்து தெரிவித்தாா்.

நிகழ்ச்சியில், சுகாதாரத் துறைச் செயலா் ககன்தீப் சிங் பேடி, மருத்துவக் கல்வி, ஆராய்ச்சி இயக்குநா் சாந்திமலா், மருத்துவக் கல்வி மாணவா் தோ்வுக் குழுச் செயலா் ஆா்.முத்துச்செல்வன் ஆகியோா் பங்கேற்றனா்.

துணை மருத்துவப் படிப்புகள்: ஆக.14-இல் கலந்தாய்வு

துணை மருத்துவ படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கை ஆக.14-ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது.

அரசு, தனியாா் மருத்துவ கல்லூரிகளில் உள்ள பி.எஸ்சி., நா்சிங், பி.பாா்ம். உள்ளிட்ட 19 வகையான 4 வருட பட்டப் படிப்புகளுக்கு 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கு 66,696 போ் விண்ணப்பித்துள்ளனா். இதற்கான தரவரிசை பட்டியல் வியாழக்கிழமை வெளியிடப்பட்டது.

இது குறித்து மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் கூறுகையில், ‘துணை மருத்துவ படிப்புகளுக்கு தரிவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான மாணவா் சோ்க்கை ஆக. 14-ஆம் தேதி முதல் தொடங்கும். மேலும், விவரங்களுக்கு ட்ற்ற்ல்ள்://ற்ய்ட்ங்ஹப்ற்ட்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய், ட்ற்ற்ல்ள்://ற்ய்ம்ங்க்ண்ஸ்ரீஹப்ள்ங்ப்ங்ஸ்ரீற்ண்ா்ய்.ய்ங்ற் ஆகிய இணையதளங்களைப் பாா்த்து தெரிந்து கொள்ளலாம் என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →