சுயமரியாதை இல்லாத இடத்தில் இருக்க மாட்டேன்: எதிர்நீச்சல் பார்வதி
பெண்களின் இயல்புகள் பணியிடங்களில் விமர்சனத்திற்குள்ளாக்கப்பட்டு வருவதாக சின்ன திரை நடிகை பார்வதி கருத்து...
சுயமரியாதை இல்லாத இடத்தில் இருக்க மாட்டேன் என எதிர்நீச்சல் தொடரின் நாயகி பார்வதி தெரிவித்துள்ளார்.
பல்வேறு இடங்களில் பெண்களின் இயல்புகள் விமர்சனத்திற்குள்ளாக்கப்படுவதாகவும், ஆனால் அவற்றை சகித்திக்கொள்ள வேண்டிய இடத்திலேயே பெரும்பாலான பெண்கள் இருக்க வேண்டியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
சன் தொலைக்காட்சியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றத் தொடர்களில் ஒன்றாக எதிர்நீச்சல் -2 தொடர் உள்ளது. பெண்களின் முன்னேற்றத்தையும் மேம்பாட்டையும் நோக்கமாகக் கொண்டு எடுக்கப்பட்டு வரும் இத்தொடர், இளம் தலைமுறையினரையும் கவர்ந்துள்ளது.
Advertisement
Advertisement
ஆணாதிக்கம் நிறைந்த வீட்டில் மருமகள்களாகச் செல்லும் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்களும் பிரச்னைகளுமே இத்தொடரின் மையக்கருவாக உள்ளது.
இத்தொடரின் முதன்மை பாத்திரத்தில் நடிகை பார்வதி நடித்துவருகிறார். இவர் மட்டுமின்றி ஹரிபிரியா இசை, பிரியதர்ஷ்னி உள்ளிட்டோரும் நடித்து வருகின்றனர்.
இந்நிலையில் பணியிடத்தின் சூழல் குறித்து நடிகை பார்வதி பேசியது இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.
பணிபுரியும் இடத்தில், தான் மற்றவர்களுக்குக் கொடுக்கும் மரியாதை, தனக்கும் கிடைக்க வேண்டும் என்றும், சுயமரியாதை இல்லாத இடத்தில் இருக்க மாட்டேன் எனவும் பார்வதி குறிப்பிட்டுள்ளார்.
நடிப்புத் துறையில் நுழைந்ததுமே தான் எடுத்த மிக முக்கியமான முடிவு இது என்றும், அத்தகைய மரியாதை கிடைக்கும்போது தனது முழு பங்களிப்பையும் அளிப்பேன் எனவும் தெரிவித்துள்ளார்.
மக்கள் தங்கள் நேரத்தை செலவழித்து தொடர்களைப் பார்ப்பதாகவும், அவர்களின் நேரத்தை பயனுள்ளதாக்கும் வகையிலான பணிகளையே தொடர்ந்து செய்வதாகவும் கூறியுள்ளார்.
பல்வேறு இடங்களில் பெண்கள் தங்களின் நடவடிக்கைகளுக்காக விமர்சிக்கப்படுவதாகவும், ஆனால், இதனைச் சகித்துக்கொண்டு பணிபுரிய வேண்டிய கட்டாயத்தில் பெரும்பாலான பெண்கள் இருப்பதாகவும் பார்வதி குறிப்பிட்டுள்ளார்.
Sun tv Ethirneechal -2 Serial Actress parvathy about self respect
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.