கடின உழைப்பின் அடையாளம் ஜீவிதா! சக நடிகையை வாழ்த்திய ஹிமா பிந்து!
கடின உழைப்பின் அடையாளமாக நடிகை ஜீவிதா முருகேசன் இருப்பதாக நடிகை ஹிமா பிந்து தெரிவித்துள்ளது குறித்து...
கடின உழைப்பின் அடையாளமாக நடிகை ஜீவிதா முருகேசன் இருப்பதாக நடிகை ஹிமா பிந்து தெரிவித்துள்ளார்.
இரு மலர்கள் தொடரில் இருவரும் இணைந்து நடித்துவரும் நிலையில், ஜீவிதாவின் பிறந்தநாளையொட்டி ஹிமா பிந்து இவ்வாறு தெரிவித்துள்ளார். இருவரும் ஒன்றாக எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹிமா பிந்து பகிர்ந்துள்ளார்.
சன் தொலைக்காட்சியில் திங்கள்கிழமை முதல் சனிக்கிழமை வரை பிற்பகல் 2.30 மணி முதல் 3.30 மணி வரை இருமலர்கள் தொடர் ஒளிபரப்பாகிறது. இத்தொடரில் நடிகை ஹிமா பிந்து - ஜீவிதா முருகேசன் ஆகியோர் நாயகிகளாக நடித்து வருகின்றனர். நடிகர் சந்தோஷ் நாயகனாக நடித்து வருகிறார்.
Advertisement
Advertisement
யார் இந்த ஜீவிதா?
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ரஞ்சனி தொடரில் நாயகியாக நடித்தவர் ஜீவிதா. இத்தொடரில் 4 ஆண் நண்பர்களுடன் பழகும் பெண்ணாக ரஞ்சனி என்ற பாத்திரத்தில் இவர் நடித்திருந்தார்.
புது வசந்தம் பாணியில் ஆண் - பெண் நட்பை பெருமைப்படுத்தும் விதமாக எடுக்கப்பட்ட இந்தத் தொடர், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.
ஜீவிதா, இதற்கு முன்பு சிங்கப் பெண்ணே தொடரில் ரெஜினா என்ற பாத்திரத்தில் நடித்திருந்தார். இதில் துணைப் பாத்திரத்தில் நடித்து வந்த நிலையில், ரஞ்சனியில் நாயகியாகவே அசத்தியிருந்தார்.
கோவையைச் சேர்ந்த ஜீவிதா, ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்துகொண்டிருக்கும்போது, அவ்வபோது போட்டோஷூட் செய்து புகைப்படங்களை சமூக வலைதளப் பக்கங்களில் பதிவிடுவது வழக்கம். அவ்வாறு இவர் பதிவிட்ட புகைப்படங்களைப் பார்த்து இவருக்கு ரஞ்சனி தொடர் வாய்ப்பு கிடைத்தது.
தற்போது இருமலர்கள் தொடரில் நாயகியாக நடித்துவரும் இவர், தனது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இவருக்கு சின்ன திரை பிரபலங்கள், ரசிகர்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
ஜீவிதாவுடன் நடித்துவரும் ஹிமா பிந்து வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளதாவது:
என் வாழ்வில் நீ கிடைத்ததற்கு நான் ஆசிர்வதிக்கப்பட்டதாக உணர்கிறேன். இருவரும் இணைந்து ஓராண்டு ஆகிவிட்டது. இந்த தருணங்கள் மிகவும் சிறப்பானவை.
வலிமை மற்றும் அர்ப்பணிப்பு உணர்வுடன் வாழ்வின் முன்னேறிச் செல்லும் உனது கடின உழைப்பு என்றுமே பலருக்கு உத்வேகம் அளிக்கக் கூடியது. நீ உண்மையிலேயே எனக்கு உத்வேகம் அளிக்கிறாய்.
ஒரு காரணத்துக்காகத்தான் நம் இருவரையும் கடவுள் நம்மை இணைத்துள்ளார். நாம் சந்தித்ததில் நான் நன்றிக்கடன்பட்டுள்ளேன்.
அன்பு, ஆரோக்கியம் மற்றும் வெற்றிகள் கொண்ட மகிழ்ச்சி நிறைந்த ஆண்டு உனக்கு அமைய வழ்த்துகிறேன். என்றும் அன்புடன் என ஹிமா பிந்து பதிவிட்டுள்ளார்.
iru malargal Jeevitha Mururugesh is a symbol of hard work! Hima Bindu congratulates her fellow actress
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.