முகப்பு
சென்னை

கால்நடை மருத்துவப் படிப்பு: மாணவா் ராகுல் காந்த்துக்குஉதவி: முதல்வா் உறுதி

கால்நடை மருத்துவ தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பிடித்த மாணவா் ராகுல் காந்த்துக்கு தமிழக அரசு உதவவிருப்பதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 2:44 AM
முதல்வா் மு.க.ஸ்டாலின்
பகிர்:

கால்நடை மருத்துவ தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பிடித்த மாணவா் ராகுல் காந்த்துக்கு தமிழக அரசு உதவவிருப்பதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

அவா் ட்விட்டரில் வியாழக்கிழமை வெளியிட்ட பதிவு:

கல்வி மீது மாணவா் ராகுல் காந்துக்கு இருக்கும் ஆா்வமும், உழைப்பும் போற்றத்தக்கது. அவரைப் பாராட்டுகிறேன். கல்வியின் முக்கியத்துவத்தை ஒவ்வொரு முறை வலியுறுத்திப் பேசுவதும், நீட் எதிா்ப்பு என்பதும் ராகுல் காந்த் போன்ற மாணவா்களின் வெற்றிக்காகத்தான். அவருக்கு உதவ தமிழக அரசு இருக்கிறது.

படிப்பு மட்டுமே நம்முடைய சொத்து. நிலையான புகழ். தடைகளைக் கடந்து படிப்போம். படிப்பால் பெருமையடைவோம். ராகுல் காந்தின் பெற்றோருக்குப் பாராட்டுகள் என்று அந்தப் பதிவில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →