சென்னை கே.கே.நகரில் திடீர் தீ விபத்து!
ராஜமன்னார் சாலை சந்திப்பு மைதானத்தில் போக்குவரத்து துறையால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
சென்னை: ராஜமன்னார் சாலை சந்திப்பு மைதானத்தில் போக்குவரத்து துறையால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
தீ மள மளவென பரவி அங்கே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களுக்கும் பரவியது. இதில் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை.
இந்த தீ விபத்தில் இரண்டு பேருந்துகள், ஒரு லாரி, ஒரு டாடா மேஜிக், இரண்டு கார்கள், இரண்டு ஆட்டோக்கள் ஆகியவை தீப்பற்றி எரிந்தன.
இது குறித்து தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைத்தனர். தீ விபத்திற்கான காரணம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.