சென்னையிலிருந்து புறப்பட்ட ரயில் என்ஜினில் திடீர் தீ விபத்து!
சென்னை சென்ட்ரலில் இருந்து மும்பை நோக்கிச் சென்ற லோக்மான்ய திலக் எக்ஸ்பிரஸ் ரயிலில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
சென்னை: சென்னை சென்ட்ரலில் இருந்து மும்பை நோக்கிச் சென்ற லோக்மான்ய திலக் எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து ஏற்பட்டதால் ரயில் நடு வழியிலேயே நிறுத்தப்பட்டது.
சென்னையில் இருந்து மும்பை நோக்கிச் சென்ற லோக்மான்ய திலக் ரயில் பேசின் பிரிட்ஜ் அருகே சென்ற போது என்ஜினிலிருந்து எழுந்த புகை மூட்டத்தால் ரயில் நடு வழியிலேயே நிறுத்தப்பட்டது. ரயிலிலிருந்து பயணிகள் உடனடியாக வெளியேறியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
தற்போது லோக்மான்ய திலக் அதிவிரைவு ரயில் பேசின் பிரிட்ஜ் மற்றும் வியாசர்பாடி ரயில் நிலையம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. உயர் அழுத்த மின் கம்பியில் ஏற்பட்ட உரசல் காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.