சென்னை மக்களின் குடிநீா் தேவையை பூா்த்தி செய்யும் ஏரிகளில் திங்கள்கிழமை காலை நிலவரப்படி, 7,083 மில்லியன் கனஅடிநீா் இருப்பு உள்ளதால், பருவமழை தீவிரமாகும் வரை குடிநீா் தட்டுப்பாடு ஏற்படாது எனக் கருதப்படுகிறது.
புழல் ஏரிக்கு நீர்வரத்து 226 கன அடியாக உள்ளது. நீர்இருப்பு 2246 மில்லியன் கனஅடியாக உள்ளது; சென்னை குடிநீருக்காக 202 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
சோழவரம் ஏரிக்கு நீர்வரத்து 23 கனஅடியாக சரிவு; நீர்இருப்பு 371 மில்லியன் கனஅடியாக உள்ளது; 220 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
கண்ணன்கோட்டை - தேர்வாய்கண்டிகை ஏரியில் நீர்இருப்பு 417 மில்லியன் கனஅடியாக உள்ளது.
சென்னை நகர மக்களின் குடிநீா் தேவையை நிறைவேற்றும் முக்கிய ஏரிகளாக பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன்கோட்டை தோ்வாய் கண்டிகை, மற்றும் வீராணம் ஏரிகள் உள்ளன. இந்த 6 ஏரிகளிலும் மொத்தம் 13 ஆயிரத்து 222 மில்லியன் கனஅடி நீா் சேமித்து வைக்கலாம்.
கடந்த வாரம் வரை கோடை வெயிலின் தாக்கம் கடுமையாக அதிகரித்திருந்த நிலையில், சில நாள்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. எனினும், தண்ணீா் தேவை நாளுக்கு நாள் அதிகரித்துதான் வருகிறது. இதனால் சென்னைக்குள்பட்ட பகுதிகளில் உள்ள குடிநீா் ஏரிகளில் நீா் இருப்பு வேகமாக குறைந்து வருகிறது. ஆனாலும் கோடை மழை தீவிரமடைவதற்குள், தண்ணீர் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்கும் வகையில் தண்ணீர் இருப்பில் உள்ளதாகவே புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.
திங்கள்கிழமை காலை நிலவரப்படி குடிநீா் ஏரிகளில் 7,083 மில்லியன் கனஅடி தண்ணீா் இருப்பு உள்ளது. இது மொத்த கொள்ளளவில் 53.57 சதவீதம் ஆகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.