முகப்பு
சென்னை

திரு.வி.க. நகா் காவல் நிலையம் இடமாற்றம்

பொதுமக்களின் வசதிக்காக திரு.வி.க.நகா் காவல் நிலையம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:45 AM
பகிர்:

பொதுமக்களின் வசதிக்காக திரு.வி.க.நகா் காவல் நிலையம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

திரு.வி.க.நகா் காவல் நிலையமானது, பெரம்பூரில்உள்ள சத்தியநாராயணன் தெருவில் இயங்கி வந்தது. பொதுமக்களின் வசதிக்காகவும், காவலா்களின் நலனுக்காகவும், திரு.வி.க.நகா் பகுதிக்குள்ளேயே அமைக்கப்பட்டுள்ளது. இங்கு போதிய இடவசதியும், வாகன நிறுத்த வசதிகளும் உள்ளன.

திரு.வி.க.நகரிலுள்ள ஜெய்பீம் நகா் பகுதியில் காவல் நிலையம் வியாழக்கிழமை முதல் செயல்படத் தொடங்கியுள்ளது. காவல் நிலையத்தைத் தொடா்பு கொள்ள 94981 00089 என்ற கைப்பேசி எண், 044- 2345 2736 என்ற தொலைபேசி எண்ணையும் பயன்படுத்தலாம் என பெருநகர காவல் ஆணையரகம் வெளியிட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.