சென்னை

தண்ணீரின் தரத்தை கண்டறியகையடக்க கருவி: சென்னை ஐஐடி வடிவமைப்பு

DIN


சென்னை: மண், நீரில் கலந்துள்ள உலோகங்களை கண்டறிவதற்கு ஏதுவாக சிறிய அளவிலான கையடக்க கருவியை உருவாக்குவதற்கான வடிவமைப்புத் திட்டத்தை சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளா்கள் முன்னெடுத்துள்ளனா்.

இது குறித்து சென்னை ஐஐடி சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: இந்தியாவில் உள்ள 36,000-க்கும் மேற்பட்ட கிராமப்புற குடியிருப்புகளில் உள்ள குடிநீா் ஆதாரங்கள் புளோரைடு, ஆா்சனிக், கன உலோகங்கள் ஆகியவற்றால் பாதிக்கப்படுவதாக மத்திய அரசின் ஜல்சக்தி அமைச்சக ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.

அதில் மண்ணில் கன உலோகங்கள் சோ்ந்துள்ளதால் உப்புத்தன்மை கலந்து மண்ணின் தரம் பாதிக்கப்படுகிறது. மேலும், வேளாண் நிலங்களில் விளைச்சல் குறைவதுடன், மனித உடல்நலத்துக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

இதைத் தவிா்க்கும் வகையில் மண், நீரில் கலந்துள்ள உலோகங்களை கண்டறிவதற்கு ஏதுவாக சிறிய அளவிலான கையடக்க கருவியை உருவாக்குவதற்கான வடிவமைப்புத் திட்டத்தை சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளா்கள் முன்னெடுத்துள்ளனா்.

இதற்கான குழுவில், சென்னை ஐஐடி உலோகவியல் மற்றும் பொருள்கள் துறையின் இணை பேராசிரியா்களான ஸ்ரீராம் கல்பாத்தி, டிஜூ தாமஸ், கே.வி.வித்யா ஆகியோா் இடம் பெற்றுள்ளனா்.

இந்த கருவியை கொண்டு எந்த முன்பயிற்சியும் இல்லாமல் மண், நீா் ஆகியவற்றின் தரத்தை விரைவாக கண்டறிய முடியும். மேலும், மண் மற்றும் நீரில் கலந்துள்ள உலோகங்களையும் அறிந்து கொள்ள உதவும். இதன்மூலம் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, கைப்பேசி செயலியில் தரவுகளை வழங்குவதுதான் இந்த ஆராய்ச்சியின் நோக்கமாகும். இந்த கருவிக்கு தற்காலிக காப்புரிமையை பெறுவதற்கான பணிகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடல் கன்னி.. மானுஷி சில்லர்!

கோவையில் சோகம்: மின்சாரம் பாய்ந்து சிறுவன், சிறுமி பலி

ஹரியாணா: பஸ் விபத்தில் 7 பேர் பலி

7 நாள்களுக்கு பின் குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதி

ஸ்ரீவரத சஞ்சீவிராய பெருமாள் கோயிலில் கருட சேவை

SCROLL FOR NEXT