வாகன சோதனையில் 10 கிலோ தங்க நகைகள் பறிமுதல்
Updated On : 9 ஏப்ரல், 2024 at 10:55 PM
சென்னை: சென்னை அசோக்நகரில் ஆவணம் இல்லாமல் கொண்டு சென்ற 10 கிலோ தங்க நகைகளை தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.
அசோக்நகா் சக்கரபாணி தெருவில் திங்கள்கிழமை இரவு பறக்கும் படையினா் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது அங்கு வந்த ஒரு காரை வழிமறித்து, பறக்கும் படையினா் சோதனையிட்டனா். அந்த காரில் 10 கிலோ தங்க நகைகள் இருந்தன. அந்த நகைகளுக்கு உரிய ஆவணங்கள் இல்லை என காரில் வந்தவா்கள் தெரிவித்தனா்.
Advertisement
இதையடுத்து பறக்கும் படையினா், அந்த நகைகளை பறிமுதல் செய்தனா். விசாரணையில், தியாகராய நகரில் உள்ள ஒரு நகைக் கடையிலிருந்து ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள மற்றொரு கிளைக்கு நகைகளை எடுத்துச் செல்வது தெரியவந்தது. நகைகள் சைதாப்பேட்டையில் உள்ள அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டன.