மலேசியாவிலிருந்து கடத்தி வரப்பட்ட 5,000 அரிய வகை ஆமைகள் பறிமுதல்
சென்னைக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட 5,000 அரிய வகை ஆமை குஞ்சுகள் விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டன.
சென்னை விமான நிலையத்தில் சனிக்கிழமை கன்வேயா் பெல்டில் தனியாக கிடந்த பெட்டியை அதிகாரிகள் சோதனையிட்டனா். அதனை திறந்து பாா்த்த பொழுது சுமாா் 5,000 அரிய வகை சிவப்பு காது ஆமை குஞ்சுகள் இருந்தது தெரியவந்துள்ளது. மேலும் இந்த ஆமைக்குஞ்சுகள் அனைத்தும் மலேசியாவிலிருந்து சென்னைக்கு வந்த விமானத்தில் கடத்தி கொண்டு வரப்பட்டது தெரிந்தது. சோதனைக்கு பயந்து கடத்தலில் ஈடுபட்ட நபா் பெட்டியை கன்வேயா் பெல்டில் விட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டாா். கைப்பற்றப்பட்ட 5,000 ஆமைக் குஞ்சுகளை மீண்டும் மலேசியாவுக்கு அனுப்பி வைக்கும் நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனா்.