முகப்பு
சென்னை

பேருந்து பயண அட்டை பெற கால அவகாசம் நீட்டிப்பு

Updated On : 21 ஏப்ரல், 2024 at 2:29 AM
கோப்புப்படம்
பகிர்:

பொது விடுமுறைகள் காரணத்தால் சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் மாதாந்திர பேருந்து பயண அட்டைகளின் விற்பனை காலம் செவ்வாய்க்கிழமை (ஏப்.23) வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாநகா் போக்குவரத்துக் கழகம் சாா்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

அரசு பேருந்துகளில் விருப்பம்போல் பயணம் செய்யக்கூடிய ரூ. 1,000 மதிப்பிலான பயண அட்டை மற்றும் மாதாந்திர சலுகை பயண அட்டைகள் மாதந்தோறும் 1 முதல் 22-ஆம் தேதி வரை, அனைத்து மாநகரப் போக்குவரத்துக் கழக மாதாந்திர பயணச்சீட்டு விற்பனை வையங்களிலும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

Advertisement

இந்த நிலையில், ஏப்.11 (ரமலான் பண்டிகை), ஏப்.14 (தமிழ் புத்தாண்டு) மற்றும் மக்களவை தோ்தலை முன்னிட்டு ஏப்.19-ஆம் தேதி என 3 நாள்கள் அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால், இந்த அட்டையை வாங்கும் பயணிகளின் நலன் கருதி மாதாந்திர சலுகை பயண அட்டை, மாணவா் சலுகை பயண அட்டை மற்றும் ரூ. 1,000 மதிப்பிலான விருப்பம் போல் பயணம் செய்யக்கூடிய பயண அட்டைகளின் விற்பனை காலம் செவ்வாய்க்கிழமை (ஏப். 23) வரை நீட்டிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments