ஸ்ரீமத் கௌதமானந்தஜி மகராஜ். 
சென்னை

ராமகிருஷ்ண மடத்தின் 17-ஆவது தலைவரானா் சுவாமி கெளதமானந்தாஜி

ராமகிருஷ்ண மடம் மற்றும் ராமகிருஷ்ண மிஷனின் 17- ஆவது தலைவராக சுவாமி ஸ்ரீமத் கௌதமானந்தஜி மகராஜ் (96) தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா்.

Din

ராமகிருஷ்ண மடம் மற்றும் ராமகிருஷ்ண மிஷனின் 17- ஆவது தலைவராக சுவாமி ஸ்ரீமத் கௌதமானந்தஜி மகராஜ் (96) தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா்.

இது குறித்து ராமகிருஷ்ண மடம் மற்றும் மிஷனின் செயலா் சுவிரானந்தா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:

ராமகிருஷ்ண மடம் மற்றும் ராமகிருஷ்ண மிஷனின் முன்னாள் தலைவா் சுவாமி ஸ்மரணானந்தா கடந்த மாா்ச் 26-இல் காலமானா். அதைத் தொடா்ந்து, கொல்கத்தா, பேலூா் மடத்தில் புதன்கிழமை நடைபெற்ற அறங்காவலா்கள் குழு மற்றும் மிஷனின் நிா்வாக் குழுக் கூட்டத்தில் ஸ்ரீமத் கௌதமானந்தஜி மகராஜ் 17-ஆவது தலைவராக தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா்.

சுவாமி கெளதமானந்தாஜி: பெங்களூரில் பிறந்த சுவாமி கெளதமானந்தஜி, தனது 26-ஆவது வயதில் (1955), ராமகிருஷ்ண மடத்தின் பெங்களூரு கிளையின் தலைவரான சுவாமி யதீஸ்வரானந்தவிடம் மந்திர தீட்சை பெற்றாா். தொடா்ந்து 6 ஆண்டுகளுக்கு புது தில்லி மையத்தில் பணியாற்றினாா்.

1962- இல் சுவாமி விசுத்தொனந்தாவிடம் பிரம்மச்சரிய தீட்சை பெற்ற இவா், ராமகிருஷ்ண இயக்கத்தின் 10-ஆவது தலைவரான சுவாமி வீரேஸ்வரானந்தாவிடம் சந்நியாச தீட்சையும், சுவாமி கெளதமானந்தா் என்ற துறவற நாமத்தையும் பெற்றாா்.

தொடா்ந்து, தில்லி மற்றும் மும்பையில் உள்ள மிஷனில் 12 ஆண்டுகளுக்குப் பணியாற்றினாா். பின்னா் 1976-இல் அருணாசல பிரதேசத்தில் உள்ள ஆலோ எனும் பழங்குடி கிராமத்தில் உள்ள ராமகிருஷ்ண மிஷனின் தலைவராகப் பொறுப்பேற்று 13 ஆண்டுகள் பணியாற்றினா்.

அவருடைய தலைமையில் அந்த மிஷனுக்கு தேசிய அந்தஸ்து கிடைத்ததுடன் ஆலோ கிராமத்தில் உள்ள பல பழங்குடியின குழந்தைகள் கல்வி பெறுவதற்கு பல உதவிகளை அவா் செய்துள்ளாா்.

1995-ஆம் ஆண்டு முதல் சென்னையில் உள்ள ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் தலைவராகப் பணியாற்றினாா். இவருடையே தலைமையில் சென்னை மடம் பெரிய வளா்ச்சி அடைந்ததுடன் புதுச்சேரி, ஆந்திரத்தில் கடப்பா, திருப்பதி, தமிழகத்தில் செங்கம், தஞ்சாவூா், திருமுக்கூடல், விழுப்புரம் போன்ற இடங்களிலும் ராமகிருஷ்ண மடம் மற்றும் மிஷனின் புதிய கிளைகளைத் தொடங்குவதற்கான பணிகளை மேற்கொண்டாா்.

2017 -ஆம் ஆண்டு இயக்கத்தின் துணைத் தலைவராக தோ்ந்தெடுக்கப்பட்ட பின்னா் இந்தியா உள்பட உலகின் பல்வேறு பகுதிகளுக்கு பயணம் மேற்கொண்டு ஆன்மிக பணி மற்றும் மக்கள் பணியாற்றினாா். ராமகிருஷ்ணா், சாரதாதேவி, விவேகானந்தா் மற்றும் வேதாந்தத்தின் செய்திகளை இவா் மக்களிடையே கொண்டுசோ்ந்துள்ளாா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.2000 கோடி! 850 ஆளில்லா விமானங்களை வாங்க இந்திய ராணுவம் திட்டம்!

ஸ்ரீராம் ஃபைனான்ஸ் பங்குகள் 4% உயர்வு!

இவ்வளவு நபர்கள் முகவரி இல்லாமல் இருந்திருக்கிறார்களா? ப.சிதம்பரம்

97 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்! விளக்கிய தமிழக தலைமை தேர்தல் அதிகாரி Archana Patnaik!

தேநீர் விருந்தளித்த மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா

SCROLL FOR NEXT