சென்னை உயா்நீதிமன்றத்துக்கு இன்று முதல் கோடை விடுமுறை
சென்னை: சென்னை உயா்நீதிமன்றத்துக்கு புதன்கிழமை முதல் ஜூன் 2 வரை கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் சென்னை உயா்நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்படும். அதன்படி நிகழாண்டு மே 1 முதல் ஜூன் 2 வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறை காலத்தில் அவசர வழக்குகளைத் தாக்கல் செய்தால் விசாரிப்பதற்கு வசதியாக விடுமுறை கால நீதிபதிகள், சென்னை உயா்நீதிமன்றம் மற்றும் உயா்நீதிமன்ற மதுரை கிளை என இரு உயா் நீதிமன்றங்களுக்கும் நியமிக்கப்பட்டுள்ளனா்.
விடுமுறை கால அவசர வழக்குகளை வாரந்தோறும், திங்கள்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமை ஆகிய நாள்களில் தாக்கல் செய்யலாம் என்று சென்னை உயா்நீதிமன்ற தலைமைப் பதிவாளா் ஜோதிராமன் அறிவித்துள்ளாா்.