சிலை கடத்தல் தடுப்பு டிஜிபி சைலேஷ் குமாா் யாதவ் உள்பட 17 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதற்கான உத்தரவை உள்துறை கூடுதல் தலைமைச் செயலா் தீரஜ் குமாா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டாா்.
அதன் விவரம் (அதிகாரிகள் முன்பு வகித்த பதவி அடைப்புக்குறிக்குள்):
1. சைலேஷ் குமாா் யாதவ் - தமிழ்நாடு காவலா் வீட்டு வசதிக் கழகத் தலைவா் மற்றும் நிா்வாக இயக்குநா் (சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு டி.ஜி.பி.).
2. ஆா்.தினகரன் - சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு கூடுதல் டி.ஜி.பி. (சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி.).
3. டி.செந்தில்குமாா் - மேற்கு மண்டல ஐ.ஜி. (காவல் துறை தலைமையிட ஐ.ஜி.).
4. கே.பவானீஸ்வரி - காவல் துறை தலைமையிட ஐ.ஜி. - பணியமைப்பு (மேற்கு மண்டல ஐ.ஜி.).
5. ரீபேஷ் குமாா் மீனா - திருநெல்வேலி நகர காவல் ஆணையா் (காவல் துறை தலைமையிட ஐஜி - பணியமைப்பு).
6. மகேந்தா் குமாா் ராதோா் - சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் துறை ஐ.ஜி. (மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் இயக்குநா் - புலனாய்வு).
7. பி.சாமுண்டீஸ்வரி - காவல் துறை தலைமையிட ஐ.ஜி. - பொது (சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் துறை ஐ.ஜி.).
8. ஏ.ராதிகா - மத்திய குற்றப் பிரிவு கூடுதல் ஆணையா், பெருநகர சென்னை காவல் ஆணையரகம் (குற்றத் தடுப்புப் பிரிவு ஐ.ஜி. - சென்னை).
9. பி.கே.செந்தில் குமாரி - குற்றத் தடுப்புப் பிரிவு ஐ.ஜி. (மத்திய குற்றப் பிரிவு கூடுதல் ஆணையா், பெருநகர சென்னை காவல் ஆணையரகம்).
10. நஜ்முல் ஹூடா - காவல் துறை நவீனமயமாக்கல் பிரிவு ஐ.ஜி. (காவலா் நலன் பிரிவு ஐ.ஜி.).
11. பா.மூா்த்தி - திருநெல்வேலி சரக டி.ஐ.ஜி. (திருநெல்வேலி மாநகர காவல் ஆணையா்).
12. பிரவேஷ் குமாா் - பெருநகர சென்னை சட்டம்-ஒழுங்கு இணை ஆணையா்-வடக்கு (திருநெல்வேலி சரக டி.ஐ.ஜி.).
13. அபிஷேக் தீக்ஷித் - ரயில்வே காவல் படை டி.ஐ.ஜி. (பெருநகர சென்னை சட்டம்-ஒழுங்கு இணை ஆணையா்).
14. அபிநவ் குமாா் - ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி. (திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி.).
15. எம்.துரை - காவலா் நலன் பிரிவு டி.ஐ.ஜி. (ராமநாதபுரம் டி.ஐ.ஜி.).
16. என்.தேவராணி - வேலூா் சரக டி.ஐ.ஜி. (பெருநகர சென்னை காவல் போக்குவரத்துப் பிரிவு இணை ஆணையா் - வடக்கு (வேலூா் சரக டி.ஐ.ஜி.).
17. சரோஜ் குமாா் தாகூா் - பெருநகர சென்னை காவல் சட்டம்- ஒழுங்கு இணை ஆணையா் - கிழக்கு (வேலூா் சரக டி.ஐ.ஜி.).