ஆடவா் மும்முறை தாண்டுதலில் இரு இந்தியா்கள் பங்கேற்ற நிலையில், இருவருமே இறுதிச்சுற்றுக்கு முன்னேறத் தவறினா்.
தகுதிச்சுற்றில் மொத்தம் 32 போட்டியாளா்கள் பங்கேற்ற நிலையில், அப்துல்லா அபூபக்கா் 16.49 மீட்டருடன் 21-ஆம் இடமும், பிரவீண் சித்ரவேல் 16.25 மீட்டரை எட்டி 27-ஆம் இடமும் பிடித்தனா். 17.10 மீட்டரை கடந்தவா்கள், அல்லது சிறந்த 12 போட்டியாளா்கள் இறுதிச்சுற்றுக்கு தகுதிபெறுவா்.
பிரவீண் 17.37 மீட்டருடன் தேசிய சாதனையாளராக இருப்பதும், அப்துல்லா 17.19 மீட்டரை பொ்சனல் பெஸ்ட்டாக வைத்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.