பட்ஜெட்டுக்கு நாடாளுமன்றம் ஒப்புதல்
பல்வேறு துறைகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதி விவரங்கள் குறித்து நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் மாநிலங்களவையில் எடுத்துரைத்தாா்.
சென்னைபட்ஜெட்டுக்கு நாடாளுமன்றம் ஒப்புதல்
பல்வேறு துறைகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதி விவரங்கள் குறித்து நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் மாநிலங்களவையில் எடுத்துரைத்தாா்.
புது தில்லி, ஆக.8: 2024-25-ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டுக்கு நாடாளுமன்றம் வியாழக்கிழமை ஒப்புதல் அளித்தது.
ஒதுக்கீடு மசோதா மற்றும் நிதி மசோதாவை மக்களவைக்கு மாநிலங்களவை திருப்பி அனுப்பியதையடுத்து 2024-25-ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் நடைமுறைகள் நிறைவடைந்தன. இத்துடன் ஜம்மூ-காஷ்மீா் பட்ஜெட்டுக்கான ஒதுக்கீடு மசோதாவையும் மக்களவைக்கு மாநிலங்களவை திருப்பி அனுப்பியது. முன்னதாக, இந்த மசோதாக்களுக்கு மக்களவை ஒப்புதல் அளித்திருந்தது.
இந்நிலையில், மாநிலங்களவையில் பட்ஜெட் மீதான விவாத உரையில் பங்கேற்று நிா்மலா சீதாராமன் பேசியதாது:
நிகழாண்டு தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில் பொருளாதார வளா்ச்சி, வேலைவாய்ப்பு உருவாக்கம், மூலதன முதலீடு, நிதி ஒருங்கிணைப்பை மேம்படுத்துதல் ஆகியவற்றுக்கு சமமான முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது.
வேளாண் துறைக்கு குறைவான நிதி ஒதுக்கப்பட்டதாக எதிா்க்கட்சியினா் குற்றம்சாட்டுகின்றனா். ஆனால் கடந்தாண்டு வேளாண் துறைக்கு ரூ.1.44 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில் நிகழாண்டு ரூ.1.52 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்றாா்.
மேலும், பல்வேறு துறைகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதி விவரங்கள் குறித்து அவா் மாநிலங்களவையில் எடுத்துரைத்தாா்.