முகப்பு
தமிழ்நாடு

தமிழ்நாடு இடைக்கால பட்ஜெட் 2026! முக்கிய அம்சங்கள்!

2026-27ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு இடைக்கால நிதிநிலை அறிக்கை பற்றி...

Updated On : 17 பிப்ரவரி 2026, 1:56 pm IST
தமிழக பட்ஜெட்
பகிர்:
Updated On : 17 பிப்ரவரி 2026, 9:23 am IST

இடைக்கால பட்ஜெட்

தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2026-27ஆம் ஆண்டுக்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சா் தங்கம் தென்னரசு தாக்கல் செய்து வருகிறார்.

தோ்தல் ஆண்டு என்பதால் இடைக்கால நிதிநிலை அறிக்கையில், பல்வேறு சலுகை அறிவிப்புகள் இடம்பெறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Updated On : 17 பிப்ரவரி 2026, 9:23 am IST

இடைக்கால பட்ஜெட் ஏன்?

ஒவ்வோா் ஆண்டும் பிப்ரவரி இறுதி அல்லது மாா்ச் முதல் வாரத்தில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வதற்கான சட்டப்பேரவைக் கூட்டத் தொடா் நடைபெறுவது வழக்கம். நிகழாண்டில் பேரவைத் தோ்தல் நடைபெற உள்ளதால் இடைக்கால நிதிநிலை அறிக்கையாக தாக்கல் செய்யப்படுகிறது.

Advertisement

Advertisement

Updated On : 17 பிப்ரவரி 2026, 9:23 am IST

முக்கிய அறிவிப்புகள் வெளியாகும்

அனைத்துத் தரப்பு மக்களின் எதிா்பாா்ப்புகளையும் பூா்த்தி செய்யும் வகையில் பல புதிய திட்டங்கள் இடம்பெறும் என்று தெரிகிறது. குறிப்பாக, பெண்கள், விவசாயிகள், இளைஞா்கள், சிறு வணிகா்கள் உள்ளிட்ட அனைவருக்கும் பயனளிக்கும் திட்டங்கள் இடம்பெறக்கூடும்.

Updated On : 17 பிப்ரவரி 2026, 9:34 am IST

பட்ஜெட் தாக்கல்

பேரவைத் தேர்தல் நெருங்கும் நிலையில் தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது.

தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.

Updated On : 17 பிப்ரவரி 2026, 9:41 am IST

தங்கம் தென்னரசு பெருமிதம்

திருக்குறளை பிற மொழிகளில் மொழிப்பெயர்க்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

தமிழகத்தின் திட்டங்களை மற்ற மாநிலங்கள் பின்பற்றுவதாக தங்கம் தென்னரசு பெருமிதத்துடன் சட்டப்பேரவையில் பகிர்ந்துகொண்டார்.

பிறமொழி ஆதிக்கத்தில் இருந்து தமிழைப் பாதுகாக்க தமிழக அரசு முனைப்புடன் செயல்படுகிறது என்றார்.

Updated On : 17 பிப்ரவரி 2026, 9:46 am IST

வறுமையை ஒழிக்கும் இறுதிப்போர்

சென்னை: தமிழ்நாட்டில் வறுமையை ஒழிக்கும் இறுதிப் போரை தொடங்கியுள்ளோம் என்று தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.

தமிழக இடைக்கால பட்ஜெட்டை பேரவையில் இன்று தாக்கல் செய்து நிதியமைச்சர் தங்கம் தென்னரசு உரையாற்றி வருகிறார்.

அவர் பேசுகையில், தமிழ்நாட்டில் வறுமையை ஒழிக்கும் இறுதிப் போரை தொடங்கியுள்ளோம். அதன் ஒரு பகுதியாக ஏற்றுமதியை பெருக்கி, பண வீக்கத்தைக் குறைத்து, தொழிலாளர் நலன் காக்கும் பெரும் திட்டம் தீட்டப்பட்டுள்ளது.

மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு அதிக நிதி வழங்கப்பட்டுள்ளது.

உணவு உற்பத்தியில் வரலாறு காணாத வளர்ச்சியைப் பெற்றுள்ளோம்.

செயற்கை நுண்ணணுறவு உள்ளிட்ட துறைகளில் இளைஞர்கள் வளர திட்டங்கள் தீட்டப்படும் வகையில் தமிழர் பெருமையைப் பறைசாற்றும் வகையில் பல அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.

நாட்டிற்கே வழிகாட்டும் வரலாற்றுக் கடமையை நாம் செய்து வருகிறோம்.

இதன் மூலம் தமிழ்நாட்டில் வறுமையை ஒழிக்கும் இறுதிப் போரை தொடங்கியுள்ளோம் என்றார்.

Updated On : 17 பிப்ரவரி 2026, 9:52 am IST

மாபெரும் காது குத்தும் விழா

தமிழ்நாடு பட்ஜெட் என்பது காது குத்தும் விழா என்று விமர்சனம் செய்துள்ள அதிமுக எம்எல்ஏக்கள், சட்டப்பேரவை வளாகத்துக்கு அழைப்பிதழுடன் வருகை தந்துள்ளனர்.

Updated On : 17 பிப்ரவரி 2026, 9:58 am IST

ரூ.285 கோடியில் அருங்காட்சியகங்கள்

சோழர் அருங்காட்சியம், நவாய் அருங்காட்சியம், நொய்யல் அருங்காட்சியம் என்று மொத்தம் ரூ.285 கோடியில் தமிழகத்தில் அருங்காட்சியங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

உலகத் தரத்தில் கீழடி மற்றும் பொருநை அருங்காட்சியம் திறந்து வைக்கப்பட்டு பெரிய வரவேற்பை பெற்றுள்ளன.

Updated On : 17 பிப்ரவரி 2026, 10:00 am IST

தமிழகமே இன்ப அதிர்ச்சியில் உறைந்துபோனது

இல்லங்களின் மகளிரின் உழைப்பை அங்கீகரிக்கும் மகளிர் உரிமைத் தொகை திட்டம் நாடு முழுவதும் போற்றும் திட்டமாக உள்ளது. பிற மாநிலங்களும் பின்பற்றும் திட்டமாக உள்ளது.

இந்த திட்டம் தடைபட்டுவிடக் கூடாது என்பதற்காக ஒரே நாளில் ஏறத்தாழ ரூ.6500 கோடி நிதியை தமிழகத்தின் ஏழை எளிய மக்களின் கரங்களில் தவழச் செய்துள்ளோம். அதிகாலையிலேயே வங்கிகளில் மகளிர் உரிமைத் தொகை வரவு வைக்கப்பட்டதால் தமிழ்நாடே இன்ப அதிர்ச்சியில் உறைந்துபோனது.

Updated On : 17 பிப்ரவரி 2026, 10:04 am IST

மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் இலங்கை தமிழர்களுக்கு வீடுகள் கட்டித் தரும் திட்டத்தில் 10,469 வீடுகள் கட்டுவதற்கு, ரூ.630 கோடி ஒதுக்கப்பட்டுள்ளன.

அந்த திட்டத்தின்கீழ் இதுவரை 6,010 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ளவை கட்டப்பட்டு வருகின்றன.

Updated On : 17 பிப்ரவரி 2026, 10:08 am IST

888 முறை பயணம்

மாநகரப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் விடியல் பேருந்து திட்டத்தில் 888 கோடி முறை பயணம் செய்து பெண்கள் பயனடைந்துள்ளனர்.

மேலும், மாநிலம் முழுவதும் 6 லட்சம் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ. 1.40 லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.

மகப்பேறு இறப்பு விகிதம் மற்றும் சிசு இறப்பு விகிதம் தேசிய சாராசரியை விட தமிழ்நாட்டில் குறைவாகவே உள்ளது.

Updated On : 17 பிப்ரவரி 2026, 10:10 am IST

மகத்தான சாதனை

விடியல் பேருந்து திட்டத்தில் 888 கோடி முறை மகளிர் பயணம் செய்து பயனடைந்துள்ளனர்.

6 லட்சம் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.1.40 லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.

19 தோழி விடுதிகள் அமைக்கப்பட்டுள்ளன.

மகளிர் நலன் காக்கும் இத்தகையை திட்டங்களை பல மாநிலங்கள் பின்பற்ற தொடங்கி உள்ளன.

மகப்பேறு இறப்பு விகிதம் மற்றும் சிசு இறப்பு விகிதம் தேசிய சாராசரியை விட தமிழ்நாட்டில் குறைவாக உள்ளது.

பெண் ஓதுவார் நியமனம் நமது அரசின் மகத்தான சாதனை

Updated On : 17 பிப்ரவரி 2026, 10:14 am IST

பள்ளிக் கல்வித்துறை

தமிழக அரசு தாக்கல் செய்திருக்கும் இடைக்கால பட்ஜெட்டில் பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ.48,534 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் அறிவிப்பு!

Updated On : 17 பிப்ரவரி 2026, 10:16 am IST

கலைஞர் கனவு இல்லம்

2030 ஆம் ஆண்டுக்குள் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டப்படும் என்ற இலக்குடன் தொடங்கப்பட்ட கலைஞர் கனவு இல்லத் திட்டத்தில் இதுவரை 1.71 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.

மேலும், 29,000 வீடுகள் கட்டுமானப் பணியில் இருக்கின்றன.

2001 வரை தமிழக அரசால் கட்டப்பட்ட 1.14 லட்சம் வீடுகள் ரூ. 969 கோடியில் புனரமைக்கப்பட்டுள்ளன.

Updated On : 17 பிப்ரவரி 2026, 10:19 am IST

துறை வாரியாக

இளைஞர் நலன், விளையாட்டுத்துறைக்கு ரூ.718 கோடி ஒதுக்கீடு

ரூ.374 கோடியில் நதிக்கரை மேம்பாடுத் திட்டம்

மக்கள் நல்வாழ்வு துறைக்கு ரூ.22,090 கோடி ஒதுக்கீடு

போக்குவரத்துத்துறைக்கு ரூ.13,062 கோடி ஒதுக்கீடு

உயர்கல்வித் துறைக்கு ரூ.8,505 கோடி ஒதுக்கீடு

தமிழ்நாடு கப்பல் கட்டும் கொள்கை விரைவில் வெளியிடப்படும்!

சிறப்பு திட்ட செயலாக்கத் துறைக்கு என ரூ.17,088 கோடி ஒதுக்கீடு

தகவல் தொழில்நுட்பத்துறைக்கு ரூ.219 கோடி ஒதுக்கீடு!

Updated On : 17 பிப்ரவரி 2026, 10:26 am IST

புதுமைப் பெண் - தமிழ்ப் புதல்வன்

புதுமைப் பெண் திட்டத்தில் 6.95 லட்சம் மாணவிகளும், தமிழ்ப் புதல்வன் திட்டங்களில் 5.40 லட்சம் மாணவர்களும் என ஒட்டுமொத்தமாக 12 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயனடைந்துள்ளனர்.

அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை படித்து, உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 நிதியுதவி வழங்கும் புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் 6.95 லட்சம் பேர் பயனடைந்து வருகின்றனர்.

இதேபோல், அரசுப் பள்ளிகளில் பயின்று உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 நிதியுதவி வழங்கும் தமிழ்ப் புதல்வன் திட்டத்தின் கீழ் 5.40 லட்சம் பேர் பயனடைந்து வருகின்றனர்.

Updated On : 17 பிப்ரவரி 2026, 10:26 am IST

ரூ.374 கோடியில் நதிக்கரை மேம்பாடுத் திட்டம்

காவிரி, வைகை, நொய்யல், தாமிரபரணி ஆறுகளில் கழிவுநீர் கலப்பதை தடுத்து, கரையோரம் பூங்காஆகியவை அமைத்து நதிக்கரை மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ள ரூ.374 கோடி ஒதுக்கீடு செய்யப்படகிறது.

Updated On : 17 பிப்ரவரி 2026, 10:50 am IST

வீட்டு மனை பட்டா

கடந்த 5 ஆண்டுகளில் ஆட்சேபனையற்ற அரசு புறப்போக்கும் நிலங்களில் வசிக்கும் 77,800 பேருக்கு வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டுள்ளது.

Updated On : 17 பிப்ரவரி 2026, 10:51 am IST

மக்கள் நல்வாழ்வு துறை

இடைக்கால பட்ஜெட்டில் மக்கள் நல்வாழ்வு துறைக்கு ரூ.22,090 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு!

Updated On : 17 பிப்ரவரி 2026, 10:53 am IST

போக்குவரத்துத் துறை

போக்குவரத்துத் துறைக்கு ரூ.13,062 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. மகளிர் விடியல் பயணம் திட்டத்துக்கு ரூ.1722 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

Updated On : 17 பிப்ரவரி 2026, 10:54 am IST

தகவல் தொழில்நுட்பத்துறைக்கு ரூ.219 கோடி ஒதுக்கீடு

தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களில் இருந்து தகவல் தொழில்நுட்ப ஏற்றுமதி பதிவாகியுள்ளது.

திருச்சி, மதுரை, ஒசூரில் புதிய டைடல் பூங்காக்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

ரூ.388 கோடியில் புதிய மினி டைடல் பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது.

Updated On : 17 பிப்ரவரி 2026, 10:59 am IST

மின்தேவை

மின்சார தேவையைக் கருத்தில் கொண்டு எரிசக்தித் துறைக்கு ரூ.18,091 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு!

Updated On : 17 பிப்ரவரி 2026, 11:06 am IST

மதுரை, கோவை மெட்ரோ

கோவை மற்றும் மதுரை மாநகரில் மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ஒப்புதல் கோரப்பட்டபோது, அதற்கான ஒப்புதல் அளிக்காமல் மத்திய அரசு திருப்பி அனுப்பியுள்ளது.

Updated On : 17 பிப்ரவரி 2026, 11:07 am IST

மெட்ரோவுக்கு ரூ. 63,246 கோடி

மூன்று வழித்தடங்களில் ரூ. 63,246 கோடி மதிப்பீட்டில் 118.9 கி.மீ. தொலைவுக்கான சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகள் விரைந்து நடைபெற்று வருகின்றன.

பூந்தமல்லி புறவழிச் சாலை முதல் போரூர் வரையிலான மெட்ரோ வழித்தடம் வடபழனி மெட்ரோவுடன் இணைக்கப்பட்டுள்ளன. விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு வரும்.

Updated On : 17 பிப்ரவரி 2026, 11:08 am IST

திருக்கோயில் பணிகள்

கடந்த 5 ஆண்டுகளில் 12,931 கோயில்களில் ரூ.8,100 கோடி மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தமிழகத்தில் 4,180 கோயில்களில் இதுவரை குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது.

1000 ஆண்டுகள் பழமையான கோயில்களை புணரமைத்து பாதுகாக்கும் நோக்கில், அரசு நிதி ரூ.425 கோடி செலவில் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதில், இதுவரை 84 கோயில்களில் குடமுழுக்குகள் நடத்தப்பட்டுள்ளன.

Updated On : 17 பிப்ரவரி 2026, 11:13 am IST

போக்குவரத்துத் துறைக்கு ரூ.13,062 கோடி

தமிழ்நாடு இடைக்கால பட்ஜெட்டில் போக்குவரத்துத் துறைக்கு ரூ. 13,062 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், தமிழ்நாடு அரசின் மகளிர் விடியல் பேருந்து பயணத் திட்டத்துக்கு ரூ. 1,722 கோடி ஒதுக்கீடு செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 17 பிப்ரவரி 2026, 11:16 am IST

கலீல் ஜிப்ரானின் கவிதை

லெபனானில் பிறந்து, அமெரிக்காவில் வாழ்ந்து, உலகப் புகழ்பெற்ற கலைஞர் கலீல் ஜிப்ரானின் கவிதையை மேற்கோள்காட்டிப் பேசினார் தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு.

Updated On : 17 பிப்ரவரி 2026, 11:24 am IST

தமிழக சுற்றுலா

சுற்றுலாவுக்காக 30.79 கோடி பேர் தமிழ்நாடு வந்துள்ளனர்.

2024ஆம் ஆண்டில் 30.79 கோடி சுற்றுலா பயணிகள் எண்ணிக்கையுடன் நாட்டிலேயே தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது.

Updated On : 17 பிப்ரவரி 2026, 11:33 am IST

ஓய்வூதியத் திட்டம்

தமிழ்நாடு இடைக்கால பட்ஜெட்டில் அரசு ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டத்துக்கு ரூ. 11,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 17 பிப்ரவரி 2026, 12:16 pm IST

போக்குவரத்துத் துறைக்கு

தமிழக இடைக்கால பட்ஜெட்டில் போக்குவரத்துத் துறைக்கு ரூ.13,062 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.

Updated On : 17 பிப்ரவரி 2026, 12:16 pm IST

நெடுஞ்சாலை

summary

நடப்பாண்டில் 253 கி.மீ. நீளமுள்ள சாலைகளை 1,647 கோடி மதிப்பீட்டில் நான்கு வழித்தட சாலைகளாக அகலப்படுத்துவதற்கான பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன.

நடப்பாண்டில் 1057 கி.மீ. நீளமுள்ள சாலைகள் 1000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தரம் உயர்த்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த இடைக்கால வரவு - செலவுத் திட்ட மதிப்பீடுகளில் நெடுஞ்சாலைகள் மற்றும் மற்றும் சிறு துறைமுகங்கள் துறைக்கு ரூ.21,132 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Updated On : 17 பிப்ரவரி 2026, 12:46 pm IST

சூழல் மாறவில்லை

மத்திய - மாநில அரசுகளுக்கு இடையே வரி பகிர்வு முறை குறித்து முன்னாள் முதல்வர் கருணாநிதி கவலையோடு பதிவு செய்த சூழல் அரைநூற்றாண்டுக் காலம் கழிந்த பிறகும் மாறவில்லை என்பது வருந்தத்தக்கது என தமிழக இடைக்கால பட்ஜெட்டில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு குறிப்பிட்டுப் பேசியுள்ளார்.

Updated On : 17 பிப்ரவரி 2026, 12:47 pm IST

சமாளித்தது எப்படி?

தமிழக மக்களுக்கு ஜனவரி மாதம் பொங்கல் பரிசு, பிப்ரவரி மாதத்தில் மகளிர் உரிமைத் தொகை என கூடுதல் செலவுகளை சமாளித்தது எப்படி? என்பது குறித்து நிதியமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கமளித்துள்ளார்.

Updated On : 17 பிப்ரவரி 2026, 1:12 pm IST

தமிழ்நாடு அரசின் கடன்

2026-27 ஆம் நிதியாண்டில் தமிழ்நாடு அரசின் கடன் ரூ. 10.62 லட்சம் கோடியாக அதிகரிக்கும் என்று இடைக்கால பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 17 பிப்ரவரி 2026, 1:13 pm IST

பெருந்தன்மை வேண்டாம்

மத்திய அரசிடம் பெருந்தன்மையை எதிர்பார்க்கவில்லை, சமநிலையினை உறுதி செய்யும் நியாயத்தை மட்டுமே கோருகிறோம் என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு குறிப்பிட்டுள்ளார்.

Updated On : 17 பிப்ரவரி 2026, 1:20 pm IST

வேலை வாய்ப்பு

6 லட்சத்திற்கும் மேலான வேலைவாய்ப்புகள் உருவாகும் வகையில், ரூ. 1,237 லட்சம் கோடி உறுதி அளிக்கப்பட்ட முதலீடுகளுக்கான 1,179 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

Updated On : 17 பிப்ரவரி 2026, 1:21 pm IST

அரசு சந்திக்கும் சவால்கள்

ஒரு கூட்டாட்சி அரசியலமைப்பில், மத்திய அரசு மாநில அரசுகளை நியாயமற்ற முறையில் நடத்திய பல நிகழ்வுகள் கடந்த காலங்களில் கண்டுள்ளோம். எனினும், இந்த அரசு எதிர்கொண்டுவரும் சவால்கள் முன்னெப்போதும் தமிழ்நாடு சந்தித்திராத ஒன்று என்று நிதியமைச்சர் கூறினார்.

தமிழ்நாட்டிற்கு பெரிய உட்கட்டமைப்புத் திட்டங்களை மறுப்பது, மத்திய அரசு பொறுப்பேற்கும் திட்டங்களுக்கான நிதியை விடுவிக்காமல் நிறுத்திவைப்பது, மாநிலங்களுடன் உரிய ஆலோசனை மேற்கொள்ளாமல் வரி விகிதங்களைச் சீரமைப்பது அல்லது நியாயமற்ற நிபந்தனைகளுடன் கூடிய திட்டச் செலவினங்களை மேற்கொள்ள கட்டாயப்படுத்துதல் ஒவ்வொரு வழியிலும் தமிழ்நாட்டின் நிதிநிலையில் செயற்கையான நெருக்கடியை ஏற்படுத்துவதற்கான அனைத்து முயற்சிகளையும் மத்திய அரசு மேற்கொண்டுவருவது தெள்ளத்தெளிவாகத் தெரிகிறது.

Updated On : 17 பிப்ரவரி 2026, 1:15 pm IST

தமிழக இடைக்கால பட்ஜெட் நிறைவு

இன்று காலை 9.30 மணிக்கு பட்ஜெட் உரை தொடங்கிய நிலையில், 11.50 மணியளவில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு உரையை நிறைவு செய்தார்.

Updated On : 17 பிப்ரவரி 2026, 1:15 pm IST

வேளாண் பட்ஜெட்

தமிழக சட்டப்பேரவையில் இடைக்கால வேளாண் பட்ஜெட்டை வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்து உரையாற்றினார்.

Updated On : 17 பிப்ரவரி 2026, 1:23 pm IST

முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தில் ரூ.178 கோடி செலவில் 21,35,000 விவசாயிகள் பயன்பெற்றுள்ளனர்.

கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் இதுவரை ரூ.707 கோடியில் 61,00,000 விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.

Updated On : 17 பிப்ரவரி 2026, 1:23 pm IST

58,712 ஏக்கர் தரிசு நிலங்கள் விளை நிலங்களாக மாற்றப்பட்டுள்ளன.

நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையம் கோயம்புத்தூரில் தொடங்கப்பட்டுள்ளது.

நெல் ஜெயராமன் மரபுசார் நெல் ரகங்கள் பாதுகாப்பு இயக்கத்தின் மூலமாக 900 மெட்ரிக் டன் பாரம்பரிய நெல் விதைகள் உற்பத்தி செய்யப்பட்டு 70,000 விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளன.

Updated On : 17 பிப்ரவரி 2026, 1:53 pm IST

மாணவர் சேர்க்கை

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில் 2021-ஆம் ஆண்டில் 74 சதவீதமாக இருந்த இளங்கலை மொத்த மாணவர் சேர்க்கை 2025-ஆம் ஆண்டில் 97 சதவீதமாக உயர்ந்துள்ளதாக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

Updated On : 17 பிப்ரவரி 2026, 1:53 pm IST

கடந்த ஐந்து ஆண்டுகளில், 101 புதிய பயிர் ரகங்கள், 21 வேளாண் நுட்பங்கள், 16 புதிய பண்ணைக் கருவிகள் நமது உழவர் பெருமக்களின் பயன்பாட்டிற்காக தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட்டுள்ளன.

Updated On : 17 பிப்ரவரி 2026, 1:54 pm IST

புவிசார் குறியீடு

சோழவந்தான் வெற்றிலை உள்பட 9 விளைபொருள்களுக்கு புவிசார் குறியீடு பெறப்பட்டுள்ளதாகவும் மேலும் 32 பொருள்களுக்கு பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் வேளாண் இடைக்கால பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 17 பிப்ரவரி 2026, 1:55 pm IST

எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

பட்ஜெட் சொத்தையான அத்திப்பழம் போல உள்ளது. வெளியே இருந்து பார்த்தால் அழகாக இருக்கும். உள்ளே பார்த்தால் சொத்தையாக இருக்கும் என்று கூறியுள்ளார் எடப்பாடி பழனிசாமி.

Updated On : 17 பிப்ரவரி 2026, 1:55 pm IST

வைகோ கருத்து

தமிழ்நாட்டின் இடைக்கால பட்ஜெட் மக்களின் காதில் பொன் ஆபர்ணத்தை குத்தியுள்ளது என்று காது குத்தும் வேலை என்கிற அதிமுகவின் குற்றச்சாட்டுக்கு மதிமுக பொதுச் செயலர் வைகோ பதிலளிக்கும் வகையில் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.