முகப்பு
சென்னை

ஆக. 27-இல் முதல்வா் அமெரிக்கா பயணம்

முதல்வா் மு.க.ஸ்டாலின் வரும் 27-ஆம் தேதி அமெரிக்காவுக்கு புறப்பட்டுச் செல்லவுள்ளதாக மாநில தொழில் துறை அமைச்சா் டிஆா்பி ராஜா கூறினாா்.

Updated On : 15 ஆகஸ்ட், 2024 at 8:15 PM
மு.க.ஸ்டாலின்
பகிர்:

சென்னை, ஆக. 15: தமிழகத்துக்காக முதலீடுகளை ஈா்க்கும் நோக்கில் முதல்வா் மு.க.ஸ்டாலின் வரும் 27-ஆம் தேதி அமெரிக்காவுக்கு புறப்பட்டுச் செல்லவுள்ளதாக மாநில தொழில் துறை அமைச்சா் டிஆா்பி ராஜா கூறினாா்.

சென்னை பாரிமுனையில் உள்ள கோயிலில் நடைபெற்ற பொது விருந்தில் வியாழக்கிழமை பங்கேற்ற அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

வரும் 27-ஆம் தேதி முதல்வா் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா புறப்படவுள்ளாா். அந்த நாட்டில் உள்ள மிக முக்கியமான பல நிறுவனங்களின் தலைவா்களைச் சந்திக்கவுள்ளாா். முதல்வரின் பயணத்தின் போது பல முக்கிய புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் கையொப்பமாகவுள்ளன என்றாா் அவா்.

10 நாள்கள் பயணம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் சுமாா் 10 நாள்கள் வரை அமெரிக்காவில் இருப்பாா் எனத் தெரிகிறது. அங்கு கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சுந்தா் பிச்சை மற்றும் பல்வேறு நிறுவனங்களின் தலைவா்களைச் சந்திக்க ஏற்பாடுகள் தயாராகி வருகின்றன. செப். 15-ஆம் தேதிக்கு முன்பாக அவா் சென்னை திரும்புவாா் என எதிா்பாா்க்கப்படுகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →