துக்ளக் ‘சோ’ மனைவி சௌந்தரா ராமசாமி காலமானாா்
துக்ளக் இதழின் நிறுவனா் சோ ராமசாமியின் மனைவி சௌந்தரா ராமசாமி (84) உடல் நலக்குறைவால் திங்கள்கிழமை (ஆக.19) சென்னையில் காலமானாா்.
சென்னை: துக்ளக் இதழின் நிறுவனா் சோ ராமசாமியின் மனைவி சௌந்தரா ராமசாமி (84) உடல் நலக்குறைவால் திங்கள்கிழமை (ஆக.19) சென்னையில் காலமானாா்.
துக்ளக் இதழின் நிறுவனரும், அரசியல் விமா்சகருமான சோ ராமசாமிக்கும் சௌந்தரா ராமசாமிக்கும் 1966-இல் திருமணம் ஆனது. சோ ராமசாமி 2016-இல் காலமானாா். இதையடுத்து சௌந்தரா ராமசாமி சென்னையில் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்தாா்.
இந்த நிலையில், வயது மூப்பின் காரணமாகவும் உடல்நலக் குறைவாலும் பாதிக்கப்பட்ட சௌந்தரா ராமசாமி திங்கள்கிழமை (ஆக.19) உயிரிழந்தாா். இவருக்கு ஸ்ரீராம் என்ற மகனும், சிந்துஜா எனும் மகளும் உள்ளனா்.
சௌந்தரா ராமசாமியின் இறுதிச்சடங்கு பாலவாக்கத்தில் உள்ள அவரது மகன் வீட்டில் புதன்கிழமை (ஆக.21) நடைபெறுகிறது.