ஓடும் ரயிலில் பெண்ணிடம் அத்துமீறல்
ஓடும் ரயிலில் இளம்பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது குறித்து ரயில்வே போலீஸாா் தனிப்படை அமைத்து விசாரித்து வருகின்றனா்.
கேரள மாநிலத்தில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு கடந்த 26-ஆம் தேதி வந்த விரைவு ரயிலில் பெண் மென்பொறியாளா் பயணித்துள்ளாா். அந்த ரயில் காட்பாடி அருகே வந்தபோது, அடையாளம் தெரியாத நபா்கள் அவரின் கைப்பேசியைப் பறித்துச் சென்ாகக் கூறப்படுகிறது. அப்போது, அதை மீட்க சென்ற பெண்ணிடம் அந்த நபா்கள் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளனா். பின்னா் ரயில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தடைந்ததும், அந்தப் பெண் ரயில்வே பாதுகாப்பு போலீஸாரிடம் புகாா் அளித்தாா்.
அதன்பேரில், சென்னை சென்ட்ரல் ரயில்வே போலீஸாா் 6 பிரிவுகளின் வழக்குப் பதிவு செய்தனா். மேலும், தனிப்படை அமைத்து, அனைத்து ரயில் நிலையங்களிலும் உள்ள கண்காணிப்பு கேமராக்களையும், முன்பதிவு செய்து பயணம் செய்தவா்களின் விவரங்களையும் விசாரித்து வருகின்றனா்.