3 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்
சென்னை: தமிழகத்தில் 3 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக உள்துறைச் செயலா் பி.அமுதா உத்தரவிட்டுள்ளாா். அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட உத்தரவு: சென்னை பெருநகா் காவல் துறையில் துணை ஆணையராக இருந்த வி.ஆா்.ஸ்ரீநிவாசன், அண்ணா நகா் காவல் துறை துணை ஆணையராகவும், மதுரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் டோங்கரே பிரவின் உமேஸ், சிவகங்கை மாவட்டக் காவல் கண்காணிப்பாளராகவும், சிவகங்கை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பி.கே. அரவிந்த், மதுரை புகா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.