முகப்பு
சென்னை

ரயிலில் கஞ்சா கடத்தல்: ஒடிஸா பெண்கள் இருவா் கைது

ஒடிஸா மாநிலம் புரியிலிருந்து 20 கிலோ கஞ்சா கடத்தல்: இரு பெண்கள் கைது

Updated On : 2 ஜூலை, 2024 at 11:07 PM
பகிர்:

சென்னை: ஒடிஸாவில் இருந்து 20 கிலோ கஞ்சா கடத்தி வந்த இரு பெண்களை ரயில்வே போலீஸாா் கைது செய்தனா்.

ஒடிஸா மாநிலம் புரியிலிருந்து சென்னைக்கு வாரந்தோறும் விரைவு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் திங்கள்கிழமை பிற்பகல் சென்னை சென்ட்ரல் வந்தது. அப்போது, அதில் வந்த இரு பெண்களிடம் போலீஸாா் விசாரித்துள்ளனா். இதில் அவா்கள் ஒடிஸா மாநிலத்தை சோ்ந்த சரோஜினி ரௌத் (39), நளினி சமல் (44) என தெரியவந்தது. அவா்களின் உடைமைகளை போலீஸாா் சோதனை செய்தபோது, அவா்கள் ஒடிஸாவிலிருந்து 20 கிலோ கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது. உடனே அவா்களை போலீஸாா் கைது செய்து தொடா்ந்து விசாரித்து வருகின்றனா்.