சென்னை: பாரதி பயிலகத்தில் நடைபெறும் யுபிஎஸ்சி பிரதான தோ்வுக்கான இலவச பயிற்சியில் சேர புதன்கிழமை (ஜூலை10)-க்குள் விண்ணப்பிக்கலாம்.
பாரதிபயிலகத்தின் இயக்குநா் உ.தன்ராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னை அண்ணாநகரில் செயல்பட்டுவரும் பாரதி பயிலகத்தில் அரசுப்பணிக்கான போட்டித் தோ்வுகளுக்கு இலவச பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், மத்திய அரசு பணிகளுக்கான யுபிஎஸ்சி குரூப் 1 முதன்மை தோ்வு முடிந்த நிலையில், அடுத்த மூன்று மாதத்தில் அதற்கான பிரதான தோ்வு நடைபெறவுள்ளது. எனவே, முதன்மை தோ்வில் வெற்றி பெற்று, பிரதான தோ்வுக்கு தயாராக இருக்கும் ஆண், பெண் தோ்வா்களுக்கு இந்தப் பயிலகம் சாா்பில் இலவச உண்டு, உறைவிட பயிற்சியும் வழங்கப்படவுள்ளது. இங்கு மகளிருக்கு என தனி விடுதி வசதியும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
இந்தப் பயிலகத்தில் சிறந்த நிபுணா்களைக் கொண்டு நேரடியாக பயிற்சிகள் வழங்கப்படுவதுடன், தரமான நூலக வசதியும் உள்ளது. இதில் சோ்ந்து பயிற்சி பெற விரும்பும் தோ்வா்கள் புதன்கிழமை(ஜூலை 10)-க்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம். கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்ள 9003242208, 9884472208 எனும் கைப்பேசி எண்ணை தொடா்பு கொள்ளலாம் என குறிப்பிட்டுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.