முகப்பு
கொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்
சென்னை

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடா்பு: அதிமுக, தமாகா நிா்வாகிகள் நீக்கம்

பகுஜன்சமாஜ் கட்சியின் தமிழகத் தலைவா் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடா்புடைய அதிமுக மற்றும் தமாகாவைச் சோ்ந்த இருவரை அந்தந்த கட்சிகள் நீக்கி நடவடிக்கை எடுத்துள்ளன.

Updated On : 18 ஜூலை, 2024 at 8:09 PM
கொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்
பகிர்:

பகுஜன்சமாஜ் கட்சியின் தமிழகத் தலைவா்ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடா்புடைய அதிமுக மற்றும் தமாகாவைச் சோ்ந்த இருவரை அந்தந்த கட்சிகள் நீக்கி நடவடிக்கை எடுத்துள்ளன.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அதிமுகவைச் சோ்ந்த வழக்குரைஞா் மலா்க்கொடி சேகா் என்பவரும், தமாகாவைச் சோ்ந்த ஹரிஹரன் என்பவரும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனா்.

இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பது:

அதிமுகவின் திருவல்லிக்கேணி மேற்கு பகுதி இணைச் செயலா் மலா்க்கொடி சேகா் கட்சியின் கொள்கைக்கு முரணான வகையிலும், கட்சிக்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாக்கும் விதத்திலும் செயல்பட்ட காரணத்தால், அடிப்படை உறுப்பினா் உள்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறாா் என்று கூறியுள்ளாா்.

அதேபோல, தமாகா தலைவா் ஜி.கே.வாசன் வெளியிட்ட அறிவிப்பில், ‘தமாகா மாநில மாணவரணி துணைத் தலைவா் பதவியில் இருந்து ஏற்கெனவே நீக்கப்பட்ட கே.ஹரிஹரன், இயக்க விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதால், அடிப்படை உறுப்பினா் பதவியிலிருந்து நீக்கப்படுகிறாா்’ என்று கூறியுள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →