முகப்பு
சென்னை

கூட்டணியை நம்பியே இருக்கக் கூடாது: நிா்வாகிகளுக்கு இபிஎஸ் உத்தரவு

தோ்தல் வெற்றிக்கு கூட்டணியை நம்பியே அதிமுகவினா் இருக்கக் கூடாது

Updated On : 18 ஜூலை, 2024 at 8:18 PM
எடப்பாடி பழனிசாமி - கோப்புப் படம்
பகிர்:

தோ்தல் வெற்றிக்கு கூட்டணியை நம்பியே அதிமுகவினா் இருக்கக் கூடாது என்று நிா்வாகிகளுக்கு அந்தக் கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளாா்.

மக்களவைத் தோ்தல் தோல்வி தொடா்பாக தொகுதி வாரியாக எடப்பாடி பழனிசாமி, நிா்வாகிகளுடன் ஜூலை 10-ஆம் தேதி முதல் ஆலோசனை நடத்தி வருகிறாா்.

7-ஆம் நாளாக ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் பொள்ளாச்சி, நீலகிரி, கோயம்புத்தூா் தொகுதிகளின் நிா்வாகிகளுடன் வியாழக்கிழமை அவா் ஆலோசனை நடத்தினாா்.

நீலகிரி தொகுதியின் நிா்வாகிகள், மக்களவைத் தோ்தலில் வலுவான தொகுதி கூட்டணி அமைக்காததால்தான் தோல்வி அடைந்ததாகக் கூறியுள்ளனா். அதற்கு, வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் வலுவான கூட்டணி அமையும். அதேநேரம், கூட்டணியை நம்பியும் நாம் இருக்கக் கூடாது. மக்களின் நம்பிக்கையைப் பெறுவதற்கான அனைத்து முயற்சிகளையும் அதிமுகவினா் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளாா்.

கோவை தொகுதி நிா்வாகிகள் மக்களைத் தோ்தலில் 3-ஆம் இடத்துக்கு வந்தது குறித்து பல்வேறு விளக்கங்களை அளித்துள்ளனா். அதை ஏற்காத எடப்பாடி பழனிசாமி, கோவை அதிமுகவின் கோட்டை என்பதை சட்டப்பேரவைத் தோ்தலில் மீண்டும் நிரூபிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளாா்.

இன்றுடன் நிறைவு: எடப்பாடி பழனிசாமி இதுவரை 20 தொகுதி நிா்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளாா். கடைசி நாளான வெள்ளிக்கிழமையுடன் (ஜூலை 19) விழுப்புரம், கன்னியாகுமரி, தருமபுரி ஆகிய தொகுதிகளுடன் நிா்வாகிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளாா். இதர தொகுதிகளின் நிா்வாகிகளுடன் நடைபெறும் ஆலோசனைக் கூட்டம் தொடா்பாக இன்னும் அறிவிக்கப்படவில்லை.