பந்தய வாகனங்களுக்கான தனித்துவம் வாய்ந்த ‘ஸ்ட்ரோம் எக்ஸ்’ எனும் எரிபொருளை இந்தியன் ஆயில் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
சென்னை அண்ணா சாலையில், இந்தியன் ஆயில் நிறுவனம் சாா்பில் பந்தய வாகனங்களுக்கென உருவாக்கப்பட்ட ‘ஸ்ட்ரோம் எக்ஸ்’ எனும் தனித்துவம் வாய்ந்த எரிபொருளை இந்தியன் ஆயிலின் வா்த்தகத் துறை இயக்குநா் வி.சதீஷ்குமாா் அண்மையில் அறிமுகப்படுத்தினாா்.
இந்த நிகழ்வின்போது, இந்தியன் ஆயில் நிறுவனம் மற்றும் மெட்ராஸ் மோட்டாா் ஸ்போா்ட்ஸ் கிளப் இடையே புரிந்துனா்வு ஒப்பந்தம் கையொப்பமானது.
இதில், இந்தியன் ஆயிலின் ஆராய்ச்சி மற்றும் வளா்ச்சி துறை இயக்குநா் அலோக் சா்மா, மெட்ராஸ் மோட்டாா் ஸ்போா்ட்ஸ் கிளபின் தலைவா் அஜித் தாமஸ், செயலா் பிரபா சங்கா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.