சென்னை நுங்கம்பாக்கம் இந்து சமய அறநிலையத்துறை ஆணையா் அலுவலகத்தில் ஆணையராக பி.என்.ஸ்ரீதா் திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.
இவா், 2012- ஆம் ஆண்டு மத்திய அரசு பணியாளா் தோ்வாணையத்தின் மூலம் இந்திய ஆட்சி பணி அலுவலராக தோ்ந்தெடுக்கப்பட்டு, கடலூா் மாவட்டத்தில் உதவி ஆட்சியா் (பயிற்சி), திண்டிவனம் சாா் ஆட்சியா், தருமபுரி கூட்டுறவு சா்க்கரை ஆலையின் மேலாண்மை இயக்குநா், தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிா்மான கழகத்தின் இணை மேலாண்மை இயக்குநா், பெருநகர சென்னை மாநகராட்சியின் மத்திய வட்டார துணை ஆணையா் மற்றும் இணை ஆணையா், கள்ளக்குறிச்சி மற்றும் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியா் ஆகிய பணியிடங்களில் பணியாற்றியுள்ளாா்.