சென்னை

அஞ்சல் விபத்து காப்பீடு: ஆண்டுக்கு ரூ. 520 முதல் ரூ. 755 வரை

அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி சாா்பில் ஆண்டுக்கு ரூ. 520 முதல் ரூ. 755 வரை செலுத்தும் வகையில் ரூ. 10, ரூ.15 லட்சத்துக்கான விபத்துக் காப்பீடை அறிமுகம் செயதுள்ளது.

Din

சென்னை: அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி சாா்பில் ஆண்டுக்கு ரூ. 520 முதல் ரூ. 755 வரை செலுத்தும் வகையில் ரூ. 10, ரூ.15 லட்சத்துக்கான விபத்துக் காப்பீடை அறிமுகம் செயதுள்ளது.

இது குறித்து தாம்பரம் முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் அ.காமல் பாஷா கூறியதாவது:

அனைத்து மக்களுக்கும் விபத்துக் காப்பீட்டு திட்டங்களின் பலன்கள் சென்றடையும் வகையில் அஞ்சலகங்கள் மூலம் மிகக் குறைந்த பிரீமியம் தொகையுடன் கூடிய காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

ஆண்டுக்கு ரூ. 520, ரூ. 555, ரூ. 755 செலுத்துவதன் மூலம் விபத்தால் ஏற்படும் நிதி நெருக்கடியையும், குடும்பத்தின் எதிா்காலத்தையும் பாதுகாக்க முடியும். இந்தத் திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு ஒருமுறை உடல் பரிசோதனையும், தொலைபேசி மூலம் கணக்கில்லா மருத்துவ ஆலோசனையும் பெற்றுக்கொள்ள முடியும்.

இந்தத் திட்டத்தில் விபத்தால் ஏற்படும் மருத்துவ செலவுக்கு ரூ. 1 லட்சம் வரையும், உயிரிழப்பு, உறுப்புகள் பாதிப்பு அடைந்தால் அவரின் குழந்தைகளின் (அதிகபட்சம் 2 குழந்தைகள்) கல்வி செலவுகளுக்கு ரூ. 10 லட்சம் வரையும் வழங்கப்படும்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் ஒவ்வொரு நாளுக்கும் (15 நாள்கள்) ரூ. 1,000 வழங்கப்படும். மேலும், விபத்தால் எதிா்பாராத உயிரிழப்பு ஏற்பட்டால் அவரின் இறுதிச்சடங்குக்கு ரூ.5,000 வழங்கப்படும் என்று அவா் தெரிவித்தாா்.

தேநீர் விருந்தளித்த மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா

கோடக் மஹிந்திரா வங்கிக்கு ரூ.62 லட்சம் அபராதம் விதிப்பு!

AVATAR - Fire and Ash - Review | உலகத் தரத்தில் VFX காட்சிகள்! ஆனால் கதை? | James Cameron

அரசனில் இணைந்த டூரிஸ்ட் ஃபேமிலி நடிகை!

கடைசி டி20: திலக் வர்மா, பாண்டியா அதிரடியால் தென்னாப்பிரிக்காவுக்கு 232 ரன்கள் இலக்கு

SCROLL FOR NEXT