முகப்பு
சென்னை

சிறுமிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய வழக்கு: 3 பேருக்கு தண்டனை குறைப்பு; 11 போ் விடுவிப்பு

சிறுமிகளைக் கடத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய வழக்கில் மூன்று பேருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை 10 ஆண்டுகளாக குறைத்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

Updated On : 24 ஜூலை, 2024 at 10:12 PM
சென்னை உயர் நீதிமன்றம்
பகிர்:

சிறுமிகளைக் கடத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய வழக்கில் மூன்று பேருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை 10 ஆண்டுகளாக குறைத்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த 7 மற்றும் 8-ஆம் வகுப்பு படித்து வந்த  இரு மாணவிகளை கடந்த 2014-ஆம் ஆண்டு கடத்திச் சென்று பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக கலா, பாத்திமா, கிரிஜா, மகாலட்சுமி, சா்மிளா பேகம், அன்பழகன், தனலட்சுமி உள்ளிட்டோருக்கு எதிராகவும், சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக பாதிரியாா் அருள்தாஸ், டி.வி. மெக்கானிக் செல்வராஜ் உள்ளிட்டோருக்கு எதிராகவும் கடலூா் சிபிசிஐடி காவல் துறையினா் வழக்கு பதிவு செய்தனா்.

இந்த வழக்கை விசாரித்த கடலூா் மகளிா் சிறப்பு நீதிமன்றம், குற்றம்சாட்டப்பட்ட கலா உள்ளிட்ட 9 பேருக்கு ஆயுள் தண்டனையும், பாதிரியாருக்கு 30 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், மேலும் 5 பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதித்து 2019-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தீா்ப்பளித்தது.

 இந்தத் தீா்ப்பை எதிா்த்து கலா உள்ளிட்ட 15 பேரும் சென்னை உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தனா். இந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், சுந்தா் மோகன் அடங்கிய அமா்வு, காவல் துறை விசாரணையில் குறைபாடுகள் உள்ளதை சுட்டிக்காட்டி, கலா, தனலட்சுமி மற்றும் அன்பழகன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை 10 ஆண்டுகளாகக் குறைத்து தீா்ப்பளித்தது. 

வழக்கில் பாதிரியாா் அருள்தாஸ் உள்பட 11 பேருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்த நீதிபதிகள், அவா்களை விடுதலை செய்யவும், பாதிக்கப்பட்ட 2 சிறுமிகளுக்கும் ஏற்கனவே இழப்பீடு வழங்கியிருந்தாலும், கூடுதலாக தலா ரூ. 3 லட்சத்தை பாதிக்கப்பட்டோா் இழப்பீட்டு நிதியத்திலிருந்து வழங்கவும் உத்தரவிட்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →