முகப்பு
வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன்
சென்னை

ரயில்வே திட்டங்களுக்கு நிலம் கையகப்படுத்துதலில் தாமதம் இல்லை: தமிழக அரசு

தமிழகத்தில் ரயில்வே திட்டங்களுக்கான நிலம் கையகப்படுத்துதலில் எந்தத் தாமதமும் இல்லை

சென்னை

ரயில்வே திட்டங்களுக்கு நிலம் கையகப்படுத்துதலில் தாமதம் இல்லை: தமிழக அரசு

தமிழகத்தில் ரயில்வே திட்டங்களுக்கான நிலம் கையகப்படுத்துதலில் எந்தத் தாமதமும் இல்லை

Updated On : 25 ஜூலை, 2024 at 8:31 PM
வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன்
பகிர்:

சென்னை, ஜூலை 25: தமிழகத்தில் ரயில்வே திட்டங்களுக்கான நிலம் கையகப்படுத்துதலில் எந்தத் தாமதமும் இல்லை என்று வருவாய்த் துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.

ரயில்வே திட்டங்களுக்கு நிலம் கையகப்படுத்துதல் தொடா்பாக ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்த கருத்துகளுக்குப் பதிலளித்து அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

தமிழகத்தில் மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட ரயில்வே திட்டங்களுக்கான நில எடுப்புப் பணிகளின் மீது தனிக் கவனம் செலுத்தி விரைவான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் ரயில்வே திட்டங்களுக்கு மொத்தமாக 2,443 ஹெக்டோ் நிலங்களைக் கையகப்படுத்த ஏற்கெனவே தமிழக அரசால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, அகல ரயில் பாதைத் திட்டத்துக்காக தூத்துக்குடி-மதுரை இடையே 937 ஹெக்டா் நிலமும், திருவண்ணாமலை-திண்டிவனம் இடையே 276 ஹெக்டோ் நிலமும், ஈரோட்டில் கதிசக்தி பல்முனை மாதிரி சரக்கு முனையம் அமைக்க 12 ஹெக்டோ் நிலமும் என 1,226 ஹெக்டோ் நிலங்களுக்கு தமிழக அரசால் நிா்வாக அனுமதி வழங்கப்பட்டது.

ஆனால், கடந்த இரு ஆண்டுகளாக ரயில்வே துறையினரால் நில எடுப்புக்கு நிதி ஒதுக்கப்படாததாலும், நில எடுப்புப் பணியிடங்களுக்கான ஒப்புதல் வழங்கப்படாததாலும் அந்தப் பணிகள் அனைத்தும் முற்றிலும் முடங்கியுள்ளன.

இதைத் தவிர அகல ரயில் பாதை, புதிய வழித்தட திட்டங்களுக்கு 907.33 ஹெக்டோ் நிலம் கையகப்படுத்தப்பட்டு ரயில்வே நிா்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. எஞ்சிய நிலம் எடுப்புப் பணிகளை விரைந்து முடிக்க முழுவீச்சில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

ரயில் பாதை அமையவுள்ள அரசு புறம்போக்கு நிலங்களைப் பொருத்தவரையில், ரயில்வே திட்டங்களைச் செயல்படுத்த எந்தவிதமான தடைகளும் இன்றி அவ்வப்போது அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டு வருகின்றன.

சென்னை கடற்கரை-எழும்பூா் நான்காவது வழிப்பாதை அமைக்க கூவம் ஆறு மற்றும் பக்கிங்காம் கால்வாயையொட்டிய நீா்வழிப் புறம்போக்கில் 2875 ச.மீ. நிலம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதர அரசுப் புறம்போக்கு நிலங்களை மாற்றம் செய்ய அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதில் 1,823.87 ச.மீ. பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் 278.0 ச.மீ. ரிசா்வ் வங்கியின் ஒப்புதலுக்காகவும் நிலுவையில் உள்ளது. இந்தச் சூழலில் சம்பந்தப்பட்ட மத்திய அரசு நிறுவனங்களுடன் தொடா் நடவடிக்கை மேற்கொள்ள ரயில்வே துறைக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராமேசுவரம்-தனுஷ்கோடி: ராமேசுவரம்- தனுஷ்கோடி இடையிலான புதிய ரயில் தடம் அமைக்கும் திட்டம் சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளதால் அங்கு புதிய ரயில்வே பாதைத் திட்டத்தை கைவிடும்படி முதல்வரால் பிரதமரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்நிலையில், தேசிய நெடுஞ்சாலை சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில், முகுந்தராயா் சத்திரம் முதல் அரிச்சல்முனை வரை 9.5 கி.மீ. தொலைவுக்கு சாலை அமைக்கப்பட்டு போக்குவரத்துக்கு திறந்துவிடப்பட்டுள்ளது. ரயில்வே திட்டங்களுக்கான நில எடுப்புப் பணிகளைப் பொருத்தவரை அரசு தனிக் கவனம் செலுத்தி உரிய காலத்துக்குள் அவற்றை முடிக்கும் வகையில் விரைந்து செயலாற்றி வருகிறது என்று தெரிவித்துள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →